பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 145 அப்போது ஒருநாள் விருதுநகரில் பாம்பே ஷோ ஒன்று நடந்தது: அந்த ஷோவிற்குக் காவல் துறைப் பாதுகாவலாகப் போடப்பட்டி ருந்தவர் அனந்தராமகிருஷ்ணன் என்ற போலீஸ் உதவி ஆய்வாளர் அவரோடு அந்த ஷோ முடியும் வரை, முத்துசாமி உரையாடிக் கொண்டிருந்தார்; ஆனால், காவல்துறை என்ன திட்டமிட்டது தெரியுமா? அதே இரவன்றுதான், முத்துசாமி, காமராஜ், நாராயணசாமி, வெங்கடாசலம் ஆகிய நால்வரும் சேர்ந்து, திருவில்லிபுத்துர் - விருதுநகர் காவல் நியைங்கள் மீது வெடிகுண்டுகளை வீசியதாகக் காவல்துறை வழக்கைச்சோடித்தது! இதே பொய் வழக்கைப் புனைந்துரைத்து முக்கியத்துவம் கொடுத்திட, சென்னை நகரிலே இருந்து தோத்தாத்திரி ஐயங்கார் என்ற சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் ஒருவர் விருதுநகருக்கு வந்தார். காவல் துறையிலும் கண்ணியவான்கள் - நீதிமான்கள் - மனச்சாட்சியாளர்கள் இருக்கிறார்கள் என்பதை உலகுக்கு உணர்த்தும் உதாரணத்திற்காக, அனந்தராமகிருஷ்ணன் என்ற அந்த உதவி ஆய்வாளர் காவல் துறைசார்பாகப் பொய்ச் சாட்சி கூற மறுத்துவிட்டார்: ஆங்கிலேய அதிகாரிகள் அவரை மிரட்டிக் கூறிய பதவி உயர்வு ரத்துக்களும், எதிர்காலம் இருண்டு விடும் என்ற அச்சுறுத்தல்களும் அவரிடம் வெற்றிபெறவில்லை. அதனால், காவல்துறை அவரிடம் ஆத்திரமடைந்தது! பாவம் அந்த நேர்மைமிக்க உதவி ஆய்வாளரை வேறு ஊருக்கு மாற்றிவிட்டார்கள் அதிகாரிகள்! வேறு என்ன செய்ய முடியும்? மாறுதல் உத்திரவோடு வேறுஓர் ஊருக்குச் சென்றுவிட்டார் உதவி ஆய்வாளர்! இந்தியா வெள்ளையராட்சியிலே இருந்து விடுதலை பெற்றதற்குப் பிறகு, தமிழகத்தில் பார்த்தசாரதி ஐயங்கார்என்பவர், சென்னை மாநிலத்தின் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருந்தார்: காவல்துறை இந்த வெடிகுண்டு வழக்கை ஜோடித்தபோது, ஐயங்கார் சிவகாசி காவல்துறை உதவி சூப்பரெண்டெண்ட்டாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் பொய் வழக்கைப் புனைவதில் இவர் வல்லவர் என்பதை இந்த வெடிகுண்டு வழக்கில் நிலைநாட்டி விட்டார்!