பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 தேசியத் தலைவர் காமராஜர் அப்ரூவராக மாறிவிட்ட வெங்கடசலம் என்பவரை, சிறைக்கட்டறையில் தள்ளி அவர் நைய்யப் புடைத்தார். வழக்கம் போல காவல் துறை லாக்கப்பில் இருப்பவரை என்னென்ன செய்யுமோ அவற்றையெல்லாம் தொடர்ந்தார். வெங்கடாசலம் மனிதன்தானே! காவல்துறை செய்த கொடுமைகளைத் தாளமுடியாமல் மனம் மாறிவிட்டார் எப்படியோ அரும்பாடுபட்டுத் தேசபக்தர்வெங்கடாசலத்திடம், சிவகாசி காவல்துறை உயர்அதிகாரியான ஐயங்கார், ஒர் ஒப்புதல் கடிதத்தைப்பெற்று, அதை நீதிமன்றத்தில் விருதுநகர்காவலர்மூலம் கொடுக்கச் செய்தார்: நீதிமன்றம் நடைபெற்றபோது, அப்ரூவர் வெங்கடாசலம் மனம் திறந்து நீதிபதி முன்பு காவல்துறையின் சித்ரவதைகளை என்னால் தாங்கமுடியாமல்தான், அந்த ஒப்புதல் கடிதத்தைக் கொடுத்தேனே தவிர, அது உண்மையல்ல என்றார்: காங்கிரஸ் கட்சியில் அப்போது புகழ்பெற்ற வழக்குரைஞராக இருந்தவர் திருச்சி டி.எஸ்.எஸ்.ராஜன் என்பவர் அவர் இந்த வழக்கு வெற்றிபெற மிகத் தீவிரமாகப் போராடினார்: இதே டி.எஸ்.எஸ். ராஜன்தான், பிற்காலத்தில் நாடு விடுதலை பெற்றபிறகு ராஜாஜி மந்திரிசபையில் தமிழக உணவமைச்சராகவும் பணியாற்றியவர்: இந்த வழக்கு எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டுமென்ற வேட்கையால், அப்போதுமிகப் புகழ்வாய்ந்த பத்திரிகை ஆசிரியராக இருந்த போத்தன் ஜோசப் அவர்களின் உடன்பிறந்தவரும், புகழ்பெற்ற வழக்கறிஞருமான ஜார்ஜ் ஜோசப் என்பவரை வழக்கில் வாதாடுமாறு ராஜன் கேட்டுக் கொண்டார். அவர் அந்த வழக்கில் ஆஜராகி தனது வல்லமையான வாதத் திறமையால் பொய் வழக்கின் முதுகெலும்பைப் பொடி பொடியாக்கிக் காட்டி, வெற்றியும் பெற்றார்: வெடிகுண்டு வழக்கை விசாரித்த முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டான ஜே.பி. எஸ். மன்றோ, 'காவல்துறையின் சாட்சிகள் நம்பத் தக்கவையாக இல்லை. இவ்வளவு அறிவுள்ள இளைஞர்கள், ஒரு வெடிகுண்டு சதியை இவ்வளவு பலவீனமாகத் திட்டமிட மாட்டார்கள் அவர்கள் அனைவரும் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்கிறேன்' என்று தீர்ப்பளித்தார் உடனே, காமராஜ் அவர்களையும் சம்பந்தப்பட்ட மற்ற எல்லா இளைஞர்களையும் ஆங்கிலேய அரசு விடுதலை செய்தது!