பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 147 இந்த சதி வழக்கைத் தொடர்ந்தபோது, காவலர்கள் அடிக்கடி காமராஜ் அவர்கள் வீட்டிற்குச் சென்று, அவருடைய தாயார் சிவகாமி அம்மையாருக்குத் தொல்ல்ைகளைத் தந்து வந்தார்கள்! திடீரென ஒருநாள் சில காவலர்கள் காமராஜ் வீட்டை முற்றுகையிட்டார்கள் வீட்டைச் சோதிக்க வேண்டும் என்றார்கள்! “எதற்காகச் சோதனை போடவேண்டும். என் மகன்தான் வேலூர்சிறையிலே இருக்கின்றானே, அதற்குள் என்வீட்டில் என்ன நடந்துவிட்டது?’ என்று சிவகாமி அம்மையார்காவலர்களை வழி மறித்தார்: 'வெடிகுண்டுகள் ஏதாவது இருக்கின்றனவா? அல்லது இரவோடு இரவாக நாட்டு வெடிகுண்டுகள் செய்யும் வேலைகளோ அல்லது அதற்கான பயிற்சிகளோதரப்படுவதற்கான அறிகுறிகள் உள்ளனவா? என்று சோதிக்கப் போகிறோம் என்றார்கள் காவல்துறையினர் சிலர்! ஆறுகின்ற சினத்தோடு காட்சி தந்த காமராஜ் தாயார், 'வீட்டில் யாரும் ஆண்கள் இல்லை! நீங்கள் சோதனை போட விரும்பினால், சோதனையின்போது எனக்குத் தெரிந்த ஆண்கள் யாராவது இருந்தாக வேண்டும்" என்று கூறினார் உறவினர் ஒருவரைக் காவலர் அழைத்து வந்த பின்புதான், வீட்டில் காவலர்களைச் சோதனை போட அனுமதித்தார் அம்மையார்: ஆனால், காவலர்கள் தேடிப் பார்த்தபோது தடயங்களோ, கருவிகளோ, ஆயுதங்களோ ஏதும் கிடைக்காததால் அவர்கள் ஏமாந்து சென்றார்கள். வேலூர் சிறையிலே பகத்சிங் வரலாற்றைக் கேட்டதின் பலன், காமராஜருக்கும் அவருடைய நண்பர்களுக்கும் தூக்குக் கயிறோ அல்லது அந்தமான் தீவுகள் கொடுமைகளோ, பர்மாவிலே உள்ள மாண்டலே சிறை பாதகங்களோ கிடைத்திருந்தால் என்ன நிலை நாட்டிற்கும் நமக்கும் ஏற்பட்டிருக்கும்? சிந்திக்க வேண்டிய சம்பவம் அல்லவா இது? விருதுநகர் வெடிகுண்டு வழக்கு ஏறக் குறைய எட்டு மாதங்களாக விசாரணை நடந்தது - மாஜிஸ்திரேட் கோர்ட்டில்! இந்த வழக்கை நடத்தப் போதிய பணம் இல்லாமல் காமராஜ் மிகவும் வேதனைப்பட்டார் தாயார் சிவகாமி அம்மையார் தனது நகைகளை விற்றும், தன்னால் முடிந்தவரை பணம் திரட்டியும் கொடுத்தார் குடியிருந்த வீட்டை மட்டும் அப்போது விற்காமல் இருந்ததே பெரிய அதிர்ஷ்டமாகும்