பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. மகாத்மாவை காமர குமாரசாமி ராஜா வ மகாத்மா காந்தியடிகள் 1934-ஆம் ஆண்டில் தமிழ்நாடு வருகை தந்தார். அப்போது காமராஜ் அவர்களின் விருதுநகர் வெடிகுண்டு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம்! இராசபாளையம் வரவேற்பு விழா! இராஜபாளையும் வட்டத்தில் அப்போது காங்கிரஸ் முன்னணித் தலைவர்களுள் ஒருவராக விளங்கியவர் பி.எஸ். குமாரசாமி ராஜா சாத்துர், இராஜபாளையம் பகுதியிலே நடைபெறும் நகர காங்கிரஸ் கட்சிப் பொதுக்கூட்டங்களிலே பேச வேண்டுமென்று குமாரசாமி ராஜாகாந்தியடிகளிடம் அனுமதி பெற்றிருந்தார்: இராஜபாளையம் நகர காங்கிரஸ் கட்சி நடத்திய காந்தியடிகள் வரவேற்பு விழாவிற்கு, காமராஜ், முத்துசாமி, முருக தனுஷ்கோடி போன்றவர்கள் முன்கூட்டியே வந்திருந்து எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தார்கள்! எங்கு பார்த்தாலும் மூவண்ணக் கொடிகளாலும், மகர தோரணங்களாலும், வாழை தென்னங்கீற்று அலங்காரங்களாலும் அந்தப் பகுதிக்கிராமங்கள் கோலாகலமாகக் காட்சியளித்தன! காந்தியடிகளுடன் மதுரை வைத்தியநாதய்யர், திருச்சி டி.எஸ்.எஸ். ராஜன் உட்பட பலரும் இராஜபாளையம் வருகைதந்து குமாரசாமி ராஜா இல்லத்தில் தங்கியிருந்தார்கள்: காமராஜ், குமாரசாமி ராஜா, முத்துசாமி, தனுஷ்கோடி போன்ற காங்கிரஸ் தொண்டர்கள், காந்தியடிகளை வரவேற்று, இராஜபாளையம் நகர காங்கிரஸ் கட்சி சார்பாகப் பாராட்டும் - வரவேற்பும் கொடுத்தார்கள்! அன்று பகல் விருந்து, பி.எஸ். குமாரசாமிராஜா அவர்களது வீட்டில்காந்தியடிகளுக்கும்உடன்வந்தவர்களுக்கும் நடைபெற்றது.