பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 1 49 தலைவர் காமராஜ், குமாரசாமிராஜா, டி.எஸ். எஸ்.ராஜன்! முத்துசாமி, தனுஷ்கோடி அனைவரும் விருந்து முடித்துக்காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டு ஆக்கப் பணிகளைக் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தார்கள்: வெடிகுண்டு வழக்கை எதிர்த்துப் போராடுக! ஆங்கிலேயர்ஆட்சி, காமராஜ் நண்பர்கள் மேல் தொடுத்திருந்த பூரீவில்லிபுத்துர் - விருதுநகர் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வழக்கு விவரங்களைக் காந்தியடிகளிடம் திரு டி.எஸ்.எஸ். ராஜன் விளக்கினார். உடனேகாந்தியடிகள், 'வெடிகுண்டு வழக்கு மட்டுமல்ல, வேறு எந்தவித வழக்குகளையும், பிரிட்டிஷ் ஆட்சி காங்கிரஸ்காரர்கள் மீது திணித்துத் தொடுத்தால், அகிம்சா வழியில் அதை எதிர்த்துப் போராடுங்கள் வழக்கு மன்றம் சென்று நீதியை நிலைநாட்டுங்கள்' என்று காந்தியடிகள் சொல்லிப் பின்னர்ஆக்கப் பணிகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மழை பலமாகப் பெய்ய ஆரம்பித்தது மூன்று மணிக்கு சிவகாசியில் நடைபெறும் வரவேற்பு விழாவிலே, காந்தியடிகள் கலந்துக் கொள்ளவேண்டும் என்பது நிகழ்ச்சி நிரலாகும்! இராஜபாளையத்தை விட்டுப் புறப்பட்டு, மணி பகல் இரண்டரை ஆகியும்; மழை அடைமழையாகப் பலத்ததே தவிர விடவில்லை! அதனால், சிவகாசி விழாவுக்கு எப்படிப் போய்ச் சேருவதென்று ஒருகணம் எல்லாரும் திகைத்தார்கள்! காந்தியடிகள் வந்த காரின் மேல்பாகம் முரட்டுத்தார்க்கித்தானால் ஆனது. அவர் ராஜபாளையம் நகரில் ஊர்வலமாக வந்தபோது, கட்டுக்கு மீறிக்கூடியிருந்த மக்கள் நெரிசல், கார்மேல்பாகக் கித்தான் மேலே மோதி விழுந்து அது பொத்தலாகிக் கிழிந்துவிட்டது! மழை அதிகமாகப் பெய்யப் பெய்யக் காரின் உட்பாகத்தில் தண்ணீர்கொட்டியது. ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மற்றொரு காரும் பழுதாகி வரும் வழியிலேயே நின்றுவிட்டது. இன்னொரு கார், காந்தியடிகள் எங்கே போகிறார், எங்கே தங்குகிறார் என்ற விவரம் புரியாததால், காருடன் ஒட்டுநர் மீண்டும் மதுரைக்கே சென்றுவிட்டார்: சிவாகாசிக்குள் காந்தியடிகள்! மதுரை வைத்தியநாதய்யர் நண்பர்கள் ஒரு காரைக்கொண்டு வந்திருந்தார்கள் அந்தக் காரைக் காமராஜ் தக்க மெக்கானிசம்