பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15C தேசியத் தலைவர் காமராஜர் தெரிந்த ஒருவரைக் கொண்டு பெய்யும் மழைக்கிடையே சரிசெய்து கொண்டிருந்தார்! இதற்குள், இராஜபாளையத்திலேயே மணி மூன்றாகிவிட்டது! காமராஜையும் குமாரசாமி ராஜாவையும் பார்த்து, இப்போதாவது புறப்படலாமா? என்ன சொல்கிறீர்கள்? என்று காந்தியடிகள் கேட்டார் குமாரசாமி ராஜா, சரி என்று கூற, காமராஜ் தலையை ஆட்டிடக் கார் தயாரானது! காரின் பின்புற இருக்கையிலே காந்தியடிகளை அமரச் செய்தார்கள் முன்புற இருக்கையிலே திருச்சி டி.எஸ்.எஸ். ராஜனும் குமாரசாமி ராஜாவும் உட்காரக் கார் புறப்பட்டது! காமராஜ், காந்தியடிகள் வந்த கிழிந்துபோன கித்தான் காமராஜ் காரிலே ஏறி உட்கார்ந்தார் வண்டிகள் சிவகாசியை நோக்கி சிவ சிவா என்று நகர்ந்தன. அவ்வளவு மக்கட் திரள்! நெரிசல்! இடைவிடாத மழைத் தூறல் சாரல்! மழையோ, நேரமாக ஆகப் பலமாகப் பெய்தபடியே இருந்தது! நனைந்தபடியே நகரும் காரில் எல்லாரும் மெதுவாகச் சென்றார்கள்! காற்றும் மழையும் நட்பானது கூடிக் கலந்தது! கடும் வேகமானது மழை ஒட்டுநரால் கண் திறந்துப் பார்த்துக் காரை ஒட்ட முடியாமல் தலையிலே இருந்து வழிந்த தண்ணீர்த் துளிகள் இமைகளுக்கு இடர் தந்தன! காந்தியடிகள் பின்பக்க இருக்கையிலே குளிரால் தாக்கப்பட்டுப் படுத்துவிட்டார். அவ்வளவுதான் ஒரு நடுக்கத்துயில் சிறுதுக்கம்! வேகமாக வீசும்மழைச் சாரல்காந்தியடிகள்மேல்படாமலிருக்கக் காமராஜ், குமாரசாமி ராஜா தங்களது மேல் துண்டுகளைக் காரின் பக்கவாட்டில் படுதாவாக்கட்டினார்கள்! மணிக்குப் பத்துமைல் வேகம் கூட கார் நகரவில்லை! அடைமழை இராஜபாளையத்திலே இருந்து சிவகாசி 22 மைல்! எங்கே நிறுத்துவது காரை? மூன்றரை மணிக்குச் சிவகாசியில் வரவேற்பு விழா விடாமல் பெய்து கொண்டே இருக்கிறது! கார் வேகமோ போகப் போகக் குறைகிறது - தள்ளாட்டத்தில் செல்கிறது! சாலையெல்லாம் தண்ணீர்த் தேக்கம்! கவலை உள்ளங்களின்கலக்கங்கள் போல ரோடு காட்சியளித்தது!