பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 151 இப்போதே மணி நாலரை மழையிலே கூடியிருந்த மக்கள் கதி என்னவோ இந்த மழையிலே எங்கே நடக்கப் போகிறது கூட்டம்! நேராகக் காமராஜரின் ஊரான விருதுநகருக்குப் போய்விடலாம் என்று எண்ணி, கார் சிவகாசிக் கடைத்தெருவிலே வந்து நின்றது - பரிதாபமாக! கொட்டும் மழையிலேயும் கூட்டம் கும்பல் கும்பலாக மக்கள் திரள் ஆண்களும்-பெண்களும்காரைச்சூழ்ந்து கொண்டு, மகாத்மா காந்திக்கு ஜே என்ற கோஷங்களை ஆவேசமாகப் போட்டார்கள் 'காரைத் திற, காந்தியைப் பார்க்க வேண்டும்! என்ற ஆர்வ ஒலிகள் கூச்சலாக மாறின. குழப்பமூட்டின மக்களிடையே பரபரப்பூட்டின! காரின் பின் இருக்கையிலே அமர்ந்திருந்த காந்தியடிகள் இடமும், துணிப் படுதாவால் அவர் மறைக்கப் பட்டிருந்த மழைத் தடுப்பும், கார் வேகமும் ஒன்றாகச் சேர்ந்ததால், அவர் தரிசனம் யாருக்கும் கிடைக்கவில்லை! பிறகு, கூட்டம் நடக்க வேண்டிய சிவகாசி இடத்திற்கு அடிகள் கார்வந்து நின்றது! சுமார்நாலாயிரம் மக்கள் நனைந்த கோலத்தோடு நின்று கோஷமிட்டபடியே இருந்தார்கள்: அங்கே, அலங்கரிக்கப்பட்ட பந்தல் அதன் மத்தியில் கார் வந்து நின்றது! அதற்கு அடியில் ஒரடி ஆழம் புதையும் மண் மேலே இருந்து ஓயாது பெய்யும்மழை! மழைக் குழப்பம்! கூட்டக் குழப்பம்! கார் குழப்பம்! கார் பந்தலுக்குப்போக முடியாமல் மழையிலும் புதை மணலிலும் சிக்கி நகர முடியாமல் நின்றிருந்த குழப்பம்! ஆனால், மக்கள் மட்டும் எதையும் கவனியாமல், ஜே கோஷம் போட்டுக் கொண்டிருந்தார்கள்! உடனே, அங்கே கூடியிருந்த மக்கள் கூட்டம், காந்தியடிகள் கார் என்னவாயிற்று என்ற கலவரத்தால் முட்டி மோதிக் காரை நெருங்கியது காரின் மேல் கிழிந்த கோலத்தோடு மூடப்பட்டிருந்த கித்தான் எங்கே? காற்றில் பறந்துவிட்டது போலும்! கார்ஒட்டுநர், கார்நகராமல் நிற்பதைக்கண்டு மனம் உலைந்தார்: அந்த நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட பந்தல்; மழையில் நனைந்தத் தளர்ச்சியாலும், மக்கள் கூட்டத்தின் மோதுதலாலும், ஏற்பட்ட அசைவு ஆட்டத்தாலும், சரிந்து சாய்ந்து கார்முன்னாலே விழுந்தது!