பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 52 தேசியத் தலைவர் காமராஜர் காமராஜூம், குமாரசாமி ராஜாவும் மற்ற காங்கிரஸ் தொண்டர்களும் எவ்வளவோ நேரமாகத் தம்மால் இயன்ற வரை கூட்டத்தை எவ்வளவோ கட்டுப்படுத்திப் பார்த்தார்கள்! ஒன்றும் முடியவில்லை! மணியும் ஐந்தாகிவிட்டது: இந்த இயற்கை செயற்கை அலங்கோலங்களை எல்லாம் கண்டும் எள்ளளவு கூட மனங்கலங்காமல், யாரையும் கோபியாமல், அகிம்சாமூர்த்தியான காந்தியடிகள், அமைதியாக இருந்த இடத்திலே இருந்தபடியே பார்த்துக் கொண்டிருந்தார். இதுதானே காந்தீயம் பொறுமை! மனம் புண்படாமாண்பு பிறர் மனத்தையும் புண்படுத்தாத உயர்குணம்: காமராஜூம் - தாமும், கட்டுப்படுத்தியும் கட்டுக் கடங்காமல் போன கூட்ட நெரிசலைக் கண்டு, நனைந்து சேறும் சகதியுமான தனது சட்டையைக் கழற்றி எறிந்துவிட்டு, சரிந்து விழுந்த பந்தலிலே உள்ள பெரிய கோல்களை உருவிக் கொண்டுக் கோலாட்டச் சண்டை போடுவதுபோல் ஆவேசமாக சுழற்றிக் கொண்டிருந்தார் - குமாரசாமி ராஜா அவர்கள் இராஜாவே கோலேந்தி விட்ட காட்சியைக் கண்ட பிற காங்கிரஸ் கோல்சண்டை வீரர்கள் எல்லாம், ஆளுக்கொரு பந்தல் கழிகளை உருவிக்கொண்டு ஆட ஆரம்பித்தார்கள்! கோல்சண்டையை கண்ட அடிகள் காமராஜ் அவர்கள் அமைதியாகக் காந்தியடிகளுக்குப் பாதுகாப்பாகக் கார் அருகேயே நின்றபடி இருந்தார் - மக்கள் உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக் கொண்டே எச்சரிக்கையோடு இருந்தார்: நீண்டநேரமாகவும்-ஆவேசமாகவும் - கோல் சண்டை செய்யும் குமாரசாமி ராஜாவின் கோபக் குறிகளைக் கண்டு காமராஜ் வியந்தார் காமராஜருக்கும் கோல் எடுக்கத் தெரியும் அதைக் காந்தியடிகள் முன்னாலேயே செய்வதா என்று அமைதியைக் கடைப்பிடித்தார். இராஜாவின் கோல்சுழற்சியைக் கண்ட மக்கள் சரசரவென்று ஒடினார்கள்-ஒரம் ஒதுங்க ஆரம்பித்தார்கள்! வழிவிட்டு விலகியது கூட்டம்! - சிலம்பம், பழகியவர்கள், தடிகளை ஆவேசமாகச் சுழற்றியதால், ஆட்டமாடியவர்களுக்குள்ளேயே கோல் அடிகள்