பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி * 53 விழுந்தனவே தவிர, பொதுமக்கள் மீது யாருக்கும் எவருடைய கோல் முனையும் படாமல் ஆடியதுதான் சிறப்பாக இருந்தது! அவ்வளவு பாதுகாப்புடன் சிலம்பாடினார்குமாரசாமி ராஜா இராஜாவிற்கு அடிவிழுந்தது! கைவிரல், கால்களிலே அவருக்குக் காயமே ஏற்பட்டது! எங்கிருந்து அவர் கோலாடினார் என்றே தெரியாத நிலையில் கூட்டத்துக்குள் சிக்கிவிட்டார் மகாத்மா காந்தியடிகள், இதையெல்லாம் கண்டு, பொதுமக்களுக்கு எந்தவிதக் காயமுமில்லாமல் அச்சுறுத்தல் கோலாட்டமாடிய குமாரசாமி ராஜா அவர்களைப் பாராட்டித்தட்டிக் கொடுத்தார்: இராஜா கைவிரலில் அணிந்திருந்த வைரமோதிரம் எங்கே விழுந்தது? யார் அதை எடுத்தார்கள் என்றே தெரியாமல் போய் விட்டது! மழைக்கூட்டம் வழிவிட்டுள்ளது என்று தெரிந்தவுடன், காமராஜ் அவர்கள் காரோட்டியை ஜாடைகாட்டி வண்டியை எடுக்கச் சொன்னார்: ஒட்டுநர், வண்டிச்சக்கரத்தை வேகமாகச்சுழலவிட்டு டர்ரென்று காரை வேகமாக எடுக்கும்போது, காமராஜ் உட்பட அனைவரும் அதைத்தள்ளி விட்டார்கள்! குமாரசாமி ராஜாவும், காமராஜூம், பிற தொண்டர்களும் ஓடிவந்து காரிலே வேகமாக ஏறிக் கொண்டதும், வண்டி பறந்தது சிவகாசியை விட்டு! வெடிகுண்டு வழக்கு- காந்தி கட்டளை: ‘விருது நகர் வெடிகுண்டு வழக்கை எதிர்த்துப் போராடுக, வன்முறையற்ற வரம்போடு அறப்போர் புரிக' என்று காந்தியடிகள் காட்டிய பச்சைக்கொடி, காங்கிரஸ் போராட்ட வீரர்களுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுத்தது! எல்லா நாளேடுகளிலும் விருதுநகர் வெடிகுண்டு வழக்கைப் பற்றியும்,அராஜகநோக்கத்தோடுகாங்கிரஸ்காரர்கள்மேல் பிரிட்டிஷ் ஆட்சி வழக்குகளைத் திணித்துத் தொடுத்தால், எதிர்த்து நில்லுங்கள் என்ற காந்தியடிகளின் குரலையும் கேட்ட தமிழகம், எதற்கும் தயார் என்ற நிலையிலே நின்றது! ஆனால், வழக்கின் தீர்ப்பு வெள்ளையர் ஆட்சி முகத்தில் கரி பூசிவிட்டதால், காங்கிரஸ் செயல் வீரர்கள்எல்லாம் தன்மானத்துடன் தலைநிமிர்ந்து ஊர்வலம் வந்தார்கள்!