பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 தேசியத் தலைவர்கமாஜர் விருதுநகர் காவல்துறையைச் சேர்ந்தவர்களும், காமராஜ் மேல் என்ன வழக்குகளைத் தொடுக்கலாம், எப்படிப்பட்ட பொய் வழக்குகளை மீண்டும் ஜோடிக்கலாம்; சிறையிலே அவரைத் தள்ளலாம் என்றே தொடர்ந்து திட்டமிடலானார்கள்: இந்தியாவின் வைசியராயாக இருந்த லார்டு வெலிங்டன் அவர்கள் தமிழ்நாட்டில் இரண்டு வாரம் சுற்றுப்பயணம் வந்தார் அவர் வருவதற்கு முன்பே, காமராஜ் அவர்களையும் மற்ற காங்கிரஸ் தொண்டர்களையும் . தலைவர்களையும் அவருடைய நண்பர்களையும் , காவல்துறை கைது செய்து காவலில் வைத்து - பிறகு விடுதலை செய்தது! காந்தியடிகள் தமிழ் நாட்டின் சுற்றுப் பயண நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு புறப்பட்டார். பீகார் பூகம்பம் காமராஜ் உதவி! 1934 - ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் நாள் வட பீகார் மாநிலத்தில் பூகம்பம் ஒன்று ஏற்பட்டது. அதன் விளைவாக பூமியைத் தோண்டத் தோண்ட அடுக்கடுக்கான பிணங்கள் மண்ணடியிலே அங்கே தென்பட்டன: கோடிக்கணக்கானரூபாய் பொருட்சேதங்கள் ஆயிரக்கணக்கான பிணக்குவியல்கள் பதினைந்தாயிரம் மைல்களுக்கு மேல் பூமிப் பிளப்புகள் சரிவுகள் ஏற்பட்டன; இந்தியாவையே ஒரு பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கின அந்த பூபாக வெடிப்புகள் பூகம்பம் மனிதர்களுடைய பாபத்திற்கு அளிக்கப்பட்ட தெய்வீக தண்டனை என்று சில வைதீகர்கள் கூறினார்கள்: ஏன், இந்திய மக்களாகிய நாம், ஆங்கிலேய ஆட்சியிலே அடிமைகளாக இருக்கின்றோமே - அதற்கான தண்டனையாக இருக்கக்கூடாதா இந்தப் பூகம்பம்? இயற்கையினால் இயக்கப்படுகின்ற பூகம்பம், எரிமலை, புயல் போன்றவை எல்லாம், ஒரு நாட்டின் ஒழுக்கங்கள், நீதிநெறிகள், மனித நேயங்கள், மனச்சாட்சிகள் இவை அழிக்கப்படும் பொழுது அவை ஆங்காரமாகி, ஒங்காரமாக ஓங்கி, உலகின் பகுதிகளை அழிக்கின்றன! அந்த அழிவுகளை அரசியல்வாதிகள் தான் நிவாரணம் செய்து மக்கள் வேதனைகளைப் போக்கவேண்டியதாக இருக்கின்றது!