பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 155 பாபு இராசேந்திர பிரசாத், அப்போதுதான் சிறையிலே இருந்து விடுதலையாகி வெளியே வந்தார். உடனே பீகார் நிவாரணப் பணிகளிலே உதவவேண்டும் என்று இந்திய மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார்: அந்த வேண்டுகோளே, பீகார் மாநிலக் காங்கிரஸ் கட்சி வேண்டுகோளாக இல்லாமல், அகில இந்திய அமைப்பாக மாறுமளவிற்குப் பெரும் கோர சம்பவமாகி விட்டது! எல்லா கட்சிக்காரர்களும் கொடையாளர்களும் - பொதுநல மன்றங்களும், ஜாதி மத இனபேத வேறுபாடின்றி அக்குழுவில் இடம் பெற்றிருந்தார்கள்! கிராமப்புறங்களில் இந்தக் குழுவிற்குத்துணையாகக் காங்கிரஸ் அமைப்புகள் பணியாற்றின. இந்தியாவின் எல்லா மாநிலங்களில் இருந்தும் பணம், மருந்துப் பொருட்கள், ஆடைகள், அவசியப் பொருட்கள் பீகார் நகரை நோக்கி வந்தன! பாபு ராஜேந்திரபிரசாத், புருஷோத்தமதாஸ் தாண்டன், பண்டித ஜவகர்லால் நேரு போன்ற பெரும் தலைவர்கள் எல்லாம் பீகார் நிவாரணப் பணிகளிலே ஈடுபட்டார்கள்! தமிழகத்தின் காங்கிரஸ் தலைவரான காமராஜ் அவர்கள், பாபு ராஜேந்திரபிரசாத் வேண்டுகோளை ஏற்று, எவ்வளவு உதவிகளைத் தமிழ்நாடு சார்பாகத் திரட்ட முடியுமோ அவ்வளவும் சேகரித்து பீகார் நிவாரணக் குழுவிற்கு அனுப்பி வைத்தார்: காங்கிரஸ் கட்சி பொன்விழா! அகில இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சி 1885ல் தோன்றி 1935-ஆம் ஆண்டின் டிசம்பர் 28-ஆம் நாள் அதன் பொன்விழா நாளாயிற்று. இந்தப்பொன் விழாவை இமயம் முதல் கன்னியாகுமரிவரை நாடெங்கும் கோலாகலமாகக் காங்கிரஸ்காரர்கள் திருவிழா போலக் கொண்டாடினார்கள்! காங்கிரஸ் ஆரம்பித்து ஐம்பது வருடங்களாயின. அந்த ஐம்பதாண்டுக் கால காங்கிரஸ் வளர்ச்சிகளை, அதன் அற்புதப் போராட்டங்களை, காந்தியடிகளின் செயற்கரிய அரசியல் செயல்களை எல்லாம், பட்டாபி சீதாராமையா'காங்கிரஸ் மகாசபை சரித்திரம்' என்ற பெயரால் புத்தகம் எழுதி வெளியிட்டார்.