பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 தேசியத் தலைவர் காமராஜர் சட்டசபையிலே நுழைந்து வெள்ளையர்ஆட்சியோடு போராடு வது என்று முடிவெடுத்துக்காங்கிரஸ் மகாசபையை விட்டு விலகிச் சென்றவர்கள் எல்லாம் மறுபடியும் காங்கிரசிலே சேர்ந்தார்கள்! விடுதலைப் போராட்டங்களிலே மீண்டும் வீறுகொண்டு போராடுவோம் என்று பொன்விழா சபதம் ஏற்றார்கள் - காங்கிரஸ் தலைவர்களும் - தொண்டர்களும்! தமிழ் நாட்டில் தலைவர் காமராஜ் காங்கிரஸ் பொன்விழாவைக் கொண்டாடி, மக்களிடையே புதியதோர்புத்துணர்வைப் புகுத்தினார்: ஒவ்வொரு கிராமக் காங்கிரஸ் அலுவலகத்திலிருந்து நகர காங்கிரஸ், வட்ட, மாவட்ட, மாநிலக்காங்கிரஸ்காரர்களை, பொன் விழாவைப் பொறுப்புடனும் சுறுசுறுப்புடனும் கொண்டாடிட காமராஜ் அவர்கள் எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்: காலையிலே காங்கிரஸ் கைராட்டைக் கொடியை ஏந்துவதும், வீதிகள் எல்லாம் மூவண்ணக் கொடிகளைப் பறக்க வைத்துத் தோரணங்களாக்குவதும், அலுவலகங்களில் வாழை மரங்களைக் கல்யாண வீடுகளிலே காட்சியளிப்பதைப்போல்கட்டுவதுமாகத் தன் நண்பர்களை ஊக்குவித்தார்: மதியம் சமபந்தி போஜனம் ஜாதிமத பேதமற்ற சமரசத் தோழமை கலந்த அரசியல்பணிகள்! மாலையிலே கட்சிப் பாடகர்களைக் கச்சேரியாகப் பாடச்செய்து மக்களைக் கூட்டிக்களிக்க வைப்பதுமாக அவர் இருந்தார்: இரவிலே பொதுக்கூட்டங்களிலே காங்கிரஸ் ஆட்சியின் பொன் விழாக் காலம் வரை ஆற்றியுள்ள தொண்டுகளை மக்களுக்குப் எடுத்துரைப்பது, சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட கலைஞர்களைக் கொண்டு நாடகம், கூத்து இவற்றை நடக்கச் செய்வது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துமாறு காமராஜர் தனது நண்பர்களைக் கேட்டுக் கொண்டார்: இவற்றையெல்லாம் கிராமங்களுக்கேற்ப, நகரங்களுக்கேற்ப, சிற்றுர் - பேரூர் மக்கள் நிலைகளுக்கேற்ப விழாக்களை நடத்தும் பொறுப்புகளை, முருக - தனுஷ் கோடியிடம் ஒப்படைத்தார் -தலைவர் காமராஜ் அவர்கள்! ہ:پA:.. یہ سمۂٹ۔ یا یہ ٹی یاسمM:ع کی مجھ لیت 34ళ >*< : - so శిక్షక : ; కై క్లే