பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(2ြ காமராஜரால் தேர்தல் வெற்றி தமிழ் நாட்டின் திருப்புமுனை: இந்த நேரத்தில், 1936ஆம் ஆண்டில் விருதுநகர் நகராட்சிக்குத் தேர்தல்நடைபெற்றது. அப்போது, நீதிக்கட்சி கொடிகட்டிப் பறந்த காலம்! காமரஜரின் அரசியல் நண்பரும், காங்கிரஸ் கட்சியின் தீவிர உழைப்பாளருமான முத்துசாமி ஆச்சாரி என்ற ஒருவர் இருந்தார். காமராஜின் அரசியல்முன்னேற்றத்தில் மிக அக்கறை கொண்ட மனிதர் அவர்! தேவர் எச்சரிக்கை காமராஜ் விடுதலை! தமிழ் நாட்டுக் காங்கிரசின் செல்வாக்கில் கொடிகட்டிப் பறந்த இருமொழி நாவலர் திரு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் நெருக்கமானநண்பராகவும் முத்துசாமிஆசாரி இருந்தார். அந்த ஆசாரியார் மறவர்குல அரிமாவான பசும்பொன் தேவர் மகனாரிடம் காமராஜை அறிமுகப்படுத்தி, அவரின் அற்புதமான அரசியல், கட்சி உழைப்புகள் ஆகியவற்றின் அரிய சேவைகளை விளக்கியிருந்தார். அந்த நட்பால், காமராஜ் அவர்களுக்கும் தேவர் பெருமகனாருக்கும் காங்கிரஸ் கட்சிப் பணிகளிலே அதன் அரசியல் பற்றும் - நெருக்கமும் தொடர்ந்திருந்தன! காமராஜின் அரசியல் நுட்பங்களை நன்றாகப் புரிந்திருந்த ஆசாரியார், எப்படியாவது அவரைநடைபெறப்போகும் விருதுநகர் நகராட்சித் தேர்தலில் வேட்பாளராக நிற்க வைத்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்று விரும்பினார்: ஆங்கிலேயர் ஆட்சியில், ஊராட்சி நகராட்சி, மாவட்ட நிர்வாகக் குழுத் தேர்தல்களில் நிற்க வேண்டுமானால் தேர்தலில் போட்டி போடுபவர்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு வரிகட்டுபவர்களாக இருக்க வேண்டும் என்பது அன்றைய தேர்தல் விதிகளிலே ஒன்று!