பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 தேசியத் தலைவர் காமராஜர் காமராஜர் பெயரில், அப்போது வீடோ, நிலமோ அவருக்கு இல்லை. அதனால், அவர் ஆட்சிக்கு வரி கட்ட வேண்டிய அவசியத்தில் இல்லை! இதை ஆசாரியார், பசும் பொன் வேங்கையாகக் காங்கிரஸ் கட்சியிலே விளங்கியிருந்த தேவர் அவர்களிடம் - காமராஜ் நிலையை விளக்கினார். உடனே தேவர் திருமகன் எட்டு ரூபாயை அந்த ஆசாரியிடம் கொடுத்து, ஆடு ஒன்றைக் காமராஜ் பெயருக்கு விலைக்கு வாங்குமாறு கூறினார். அந்த ஆட்டைக்காமராஜருக்கு உரிமையாக்கி, அவரைவிருதுநகர் நகராட்சி மன்றத்திற்குச் சென்று தனது பெயரால் வரி கட்டுமாறு பணித்தார். பிறகு, தேர்தலிலே காமராஜரைக் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நிற்குமாறு கூறினார்: காமராஜூம் -ஆசாரியாரும் தேவர்பெருமகன்கூறியவாறு செய்து, தேர்தலிலும் காமராஜ் நின்றார்; தனக்கு எதிராகப் போட்டியிடும் ஜஸ்டிஸ் கட்சியை எதிர்த்து கடுமையாக வாக்குகளைத் திரட்டிக் கொண்டிருந்தார்: விருதுநகரில் பெருஞ்செல்வச்சீமான்களான எம்.எஸ்.பி. நாடார், வி.வி. ராமசாமி நாடார் ஆகியோர், நகராட்சித் தேர்தலிலே ஜஸ்டிஸ் கட்சிச்சார்பாக அப்போது போட்டியிட்டார்கள்! தங்களை எதிர்த்து ஒரு சாதாரண ஏழை மகன் போட்டியிடுவதா? என்ற ஆணவத்தில், இரவோடு இரவாகக் ஒன்று விவசாயப் பெருமக்களுக்குரிய திட்டத்தை உருவாக்குவது; மற்றொன்று, தேர்தல் அறிக்கைகளைத் தயாரிப்பது என்ற இரண்டு செயல்களில் அவர்கள் ஈடுபட்டனர். இது நிற்க. அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியில், 1936- ஆம் ஆண்டின் தலைவரான நேருவிற்கும் - அதன் செயற்குழுவிலே உள்ள பெரும்பான்மையானவர்களுக்கும் மனமாச்சரியங்கள்தலைதூக்கின ஐரோப்பாவிலே இருந்து திரும்பிய நேரு, பொதுவுடைமை, சோசலிசக் கொள்கையோடு திரும்பினார் காங்கிரசின் சாதனைகள் அவருக்கு மன நிறைவைக் கொடுக்கவில்லை. ஆரம்பத்திலேயே பண்டித நேரு, தலைமைப் பதவியிலே இருந்து விலகிக் கொள்ளத் தயாராக இருந்தார்! ஆனால், அவர்விலகக்கூடாது என்றும், தலைவராகவே இருந்து பணியாற்றுமாறும் காங்கிரசில் பலர் அவரை வற்புறுத்தினார்கள்!