பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 159 ஆனால், அவருக்கு மனநிம்மதி இல்லை; திருப்தி இல்லை; மனச்சாட்சி அவரைஉறுத்தியது! தமது தலைமையுரை, வெறும் பேச்சாகக் காற்றோடு கலந்து போய்விட நேரு விரும்பவில்லை! செயலுக்கு வழிகாட்டியாக அவ்வுரை அமைய வேண்டும் என்று கருதினார்: நேருவின்சொற்பொழிவை எதிர்ப்பவர்களாகக் காந்தியடிகளும், அவரைப் பின்பற்றும் பத்துபேரும் காங்சிரஸ் செயற்குழுவிலே இருந்தனர்! புது உறுப்பினர் மூவருடன் நேரு அவர்களையும் சேர்த்து நான்காயிற்று. பதினைந்தாவது செயற்குழு உறுப்பினர் அதில் கலந்து கொள்ளவில்லை! சுபாஷ்சந்திரபோஸ் அப்போது சிறையிலே இருந்தார். நேரில் கலந்து கொண்டிருந்தாலும், அவர்இரு வழிகளிலும் கலந்து கொள்ளாமல், தம் தனி வழிச் சென்றிருப்பார் வடநாட்டில் அப்போது இந்தியத் தேசியக் காங்கிரஸ் கட்சியின் நிலைமை இவ்வளவு குழப்பமாகக் காணப்பட்டது. தமிழ்நாட்டின் காங்கிரஸ் கட்சி நிலை அதற்கு நேர் மாறாகவே நடந்தது! தலைவர் காமராஜ் வாழ்க்கையே தமிழ்நாட்டிற்கு ஒரு திருப்பு முனையாக இருந்தது! தமிழ்நாடுகாங்கிரஸ்கட்சியின் எந்தச்செயற்பாடுகளானாலும் சரி, தலைவர்காமராஜைக் கலந்து பேசாமல், அவருடைய கருத்துகளைக் கேட்காமல், முன்கூட்டியே அவருக்குத் தெரிவித்து முடிவு தெரியாமல், யாரும் எதையும் நடத்த முடியாது-நடத்தக்கூடாது என்ற நிலை பரவலாகவே எல்லோருக்குமே 1936-ஆம் ஆண்டு முதலே ஏற்பட்டு விட்டது. காரைக்குடியில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் எஸ் சத்திய மூர்த்தி ஐயர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.தலைவர் காமராஜ் அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார் அந்த ஆண்டில் பண்டித நேரு அவர்கள் தமிழ்நாடு சுற்றுப் பயணம்செய்தார்! முன்பு அவர்வந்தபோது தனத அருமைத் துணைவியுடன் தமிழகம் வந்தார். இம்முறை மனைவியை இழந்தவராக வரும்நிலை அவருக்கு ஏற்பட்டு விட்டது! அகில இந்தியத் தலைவராகப் பண்டித நேரு அவர்கள் தமிழகம் வரும்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவரான எஸ். சத்தியமூர்த்தியும், செயலாளரான காமராஜ் அவர்களும், அவருடன் சென்று எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்கள்!