பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16C தேசியத் தலைவர் காமராஜர் ஆங்கிலேயர்ஆட்சி அப்போதுதமிழ்நாட்டில் பொதுத் தேர்தலை நடத்திவிடத்திட்டமிட்டது. ஏனென்றால், ஜஸ்டிஸ்கட்சி, காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்து விடும் என்பது அவர்கள் நம்பிக்கை. இந்தத் தோல்வியைக் கொண்டே இந்தியா முழுவதிலும் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியையும் - பலத்தையும், காமராஜ் அவர்களின் துணிகரமான, விவேகமான தொண்டுகளால் வேரூன்றிவிட்டதமிழகக் காங்கிரஸ்கட்சியின்சக்தியையும் சரியாகக் கணிக்கத் தவறிவிட்டது வெள்ளை ஆட்சி! காமராஜ் என்பவரின்நாட்டுப்பற்று.அவரால்தமிழகவாலிபர்கள் இடையே பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள எழுச்சி, அவர்தான் காங்கிரஸ் கட்சி காங்கிரஸ்தான் காமராஜர் என்ற நிலையை நாட்டியது! அவரது அரசியல் பலம், கட்சிபலம், ஆங்கிலேயர்ஆணிவேரை அறுத்தெறியப் போகிற ஒர் அற்புத சக்தியாக விஸ்வரூபமெடுத்தது! அது எதிர்காலத் தமிழக மக்களுக்கும் இந்திய மக்களுக்கும் உணர்த்தப் போகின்ற அரசியல் ஹெர்குலிஸ் சக்தி என்பது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எங்கே தெரியப்போகிறது? காமராஜ் என்ற கர்மயோகி தான், இந்தியாவின் கிங் மேக்கராகக் காட்சியளிக்கப் போகிறார்என்ற நியாயச்சான்று, காந்தியடிகளுக்கும் - நேரு பெருமகனாருக்கும் தெரிந்திட அரசியலில் அற்புத விளக்கா வைத்திருந்தார்கள் இல்லையே! மேதினி மக்களிடையே, அவனி வாழ் அரசியல் அரங்குகளி னிடையே, இந்தியாவின் மானத்தைக் காப்பாற்றித் தந்த காமராஜ் என்ற சாம்சன் பெருமையை - அருமையை மேதைமையை எதிர்கால உலகம் உணர்வதற்கான வித்துக்களை, நடைபெறப் போகும் பொதுத் தேர்தல் முடிவு காட்டும் என்பது பிரிட்டிஷ்காரனுக்கு புரியாததிலே வியப்பேதும் இல்லையல்லவா? 1937-ஆம் ஆண்டு, இந்தியா முழுவதற்கும், தமிழ்நாடு சட்டசபைக்கும் பொதுத் தேர்தல் நடைபெற்றது! காங்கிரஸ் கட்சிதான்.அகில இந்தியத் தேர்தலில் வெற்றி பெற்ற தனிப் பெரும் கட்சியாகக்காட்சிதந்தது! இந்தியா முழுவதும் பதினோரு மாநிலங்களில் நடைபெற்றது தேர்தல் தமிழ்நாடு, பம்பாய், ஐக்கிய மாநிலம், மத்திய பிரதேசம், பீகார், ஒரிசா ஆகிய ஆறு மாநிலங்களில் மகத்தான வெற்றியைக் காங்கிரஸ் ஈட்டியது: