பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 1 61 ஐக்கிய மாநிலத்தில் 218 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 184சட்டசபை இடங்களிலே வெற்றி பெற்றது மத்திய பிரதேச மாநிலத்தில் 112 இடங்களிலே போட்டியிட்ட சட்டசபைத் தேர்தலில், 70 இடங்களைக் கைப்பற்றியது. பீகார் மாநிலத்தின் சட்டசபைத் தேர்தலில் 152 இடங்களில் போட்டியிட்டது காங்கிரஸ் கட்சி 95 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது: ஒரிசா மாநிலப் பொதுத் தேர்தலில் 60 இடங்களில் போட்டியிட்டு 36 இடங்களைப் பெற்றது! பம்பாய் காங்கிரசுக்குப் பாதி இடங்களும், அசாம் மாநிலத்தில் 108 இடங்களில் போட்டி போட்ட காங்கிரஸ் 35 இடங்களையும், வடமேற்கு எல்லை மாநிலத்தில் 50 இடங்களில் நின்ற காங்கிரஸ் 19 இடங்களிலும், வெற்றி பெற்றது. வங்காளத்தில், 250க்குப் போட்டியிட்டு 60 இடங்களையும், பஞ்சாபில் 170க்கு 18 இடங்களையும், சிந்து மாநிலத்தில் 60க்கு 8 இடங்களையும் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும்.215 இடங்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு 150 இடங்களிலே மிகப் பெரும் பலத்தோடு வெற்றி பெற்றுள்ளது என்றால்; அது காமராஜ் என்ற கடமை வீரரின் உணர்ச்சிக்கும் சுறுசுறுப்புக்கும், மதிநுட்பத்திற்கும், தேசபக்தியின் வைராக்கிய மன உறுதிக்கும் கிடைத்த வெற்றியல்லவா! தமிழ்நாட்டைப் போல 150 இடங்களிலே வெற்றி பெற்ற மாநிலம் இந்தியாவிலே உள்ள பதினொரு மாநிலங்களிலேயும் இல்லை. அப்போதே காமராஜ் அவர்கள், தான் தேர்தல் களத்திலே முதலிடம் பெறும் அரசியல் அரிமா என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார். 1967-லே அல்ல; 1931-லேயே அதுபோலவே, தமிழக மக்களிடையே வாக்களிக்கும் வாக்காளர்களை அணுகி, மொத்த வாக்குகளில் 65 சதவிகிதம் வாக்குகளைப் பெற்றுக் காட்டினார். தேர்தலில் மிகப்பெரும்ஜாம்பவான் கட்சி என்றும் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்துக்காட்ட ஜஸ்டிஸ்கட்சி ஒன்றே போதுமானது என்றும் ஆங்கிலேயரால் எண்ணப்பட்ட கட்சி 21 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. தேர்தலுக்கு முன்பு தமிழ்நாட்டை ஆட்சி செய்த ஜஸ்டிஸ்கட்சி செல்வச் சீமான்களைப் பெற்ற கட்சி ராஜாக்களும் மிட்டா மிராசுகளும் உள்ள கட்சி சரிகைத் துப்பட்டாக்களும், சர்களும், ராவ்பகதூர்களும் திவான் பகதூர்களும் உள்ள, ஆங்கிலேயர் ஆதரவு பெற்ற கட்சி!