பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 தேசியத் தலைவர் காமராஜர் அந்தக் கட்சி, தமிழ்நாட்டுப் பொதுத் தேர்தலில் 21 இடங்களை மட்டுமே பெற முடிந்தது என்றால், காங்கிரஸ் கட்சியை காமராஜ் அவர்கள் எவ்வளவு அரும்பாடுபட்டு வளர்த்திருக்க வேண்டும் என்பதை மனச் சாட்சியுள்ள அரசியல்வாதிகள் எண்ணிப் பார்க்க வேண்டிய ஒன்றல்லவா? ஜனாப் ஜின்னாவின் முஸ்லிம் லீக் கட்சி ஒரிடத்திலும் வெற்றி பெறவில்லை! ஆனால், காங்கிரஸ் முஸ்லிம் லீக் கட்சி 36இடங்களில் போட்டியிட்டு 15இடங்களைப் பெற்றது! தமிழ்நாட்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் காமராஜ் அவர்கள், தனது சொந்த ஊரான விருதுநகர் சேர்க்கப்பட்ட சாத்தூர் தொகுதியிலே போட்டியிட்டார் சாத்தூர் தொகுதி இரண்டு பேர் போட்டியிடும் இரட்டை மெம்பர் தொகுதி ஒன்று பொதுத் தொகுதி, மற்றொன்று ரிசர்வ் தொகுதி! பொதுத் தொகுதிக்குக் காங்கிரஸ் கட்சி சார்பாகத் தலைவர் காமராஜ் அவர்களும், ஜஸ்டிஸ் கட்சி சார்பாக இராமசாமி என்பவரும் போட்டியிட்டார்கள் ரிசர்வ் தொகுதிக்கு மாணிக்கம் என்பவர் காங்கிரஸ் கட்சி வேட்பாளராகவும், அவரை எதிர்த்து மீனாம்பாள் சிவராஜ் அவர்களும் போட்டியிட்டார்கள் தேர்தல் நடைபெறும் முன்னரேஐஸ்டிஸ் கட்சி வேட்பாளரான இராமசாமி போட்டியில் இருந்து விலகிக் கொண்டார் பொதுத் தொகுதியின் வேட்பாளர், தலைவர்காமராஜ் மட்டும்தான் இருந்தார்; என்றாலும் தேர்தல் நடைபெற்றது. இப்போதெல்லாம் நடைபெறும் தேர்தல்களில் சின்னங்கள் ஒதுக்குவதுபோல், அப்போதெல்ாம் இல்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு வண்ணம் மட்டுமே கொடுக்கப்படும். அதற்கேற்பக் காங்கிரஸ் கட்சிக்கு மஞ்சள் நிறம் கிடைத்தது. அதனால்தான், தேர்தலிலே பணியாற்றிய காங்கிரஸ் வேட்பாளர்களைச் சேர்ந்த காங்கிரஸ் அன்பர்கள் 'மஞ்சள் பெட்டிக்கே மகத்துவம் மணக்குது மகாத்மா வாக்கியம்' என்று பாடி ஊர்தோறும் வாக்குகளைக் கேட்டார்கள்! சாத்துர் தொகுதியில் மூன்று வேட்பாளர்கள் போட்டி காங்கிரஸ் வேட்பாளர்களான காமராஜ் அவர்களும் மாணிக்கமும் வெற்றி பெற்றார்கள் வெற்றி வீரர்கள் இருவரும் விருதுநகரிலே ஏகக் கோலாகலமாக இரட்டைக் குதிரைச் சாரட்டில் பவனி வந்தார்கள் முன்னும் பின்னும்மக்கட் கூட்டம் அலைமோதின.