பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 1 63 அந்த வெற்றி ஊர்வலம் போல ஒர் ஊர்வலம் விருது நகர் அரசியல் வரலாற்றிலே அன்றுவரை நடந்ததில்லை என்று மக்கள் பேசியபடியே ஊர்ந்தனர்; விருதுநகர் தெப்பக்குளம் வழியாக ஊர்வலம் நகர்ந்து வந்து கொண்டிருந்தபோது, வெற்றி வீரர் காமராஜ் அவர்கள் அமர்ந்திருந்த சாரட்டு வண்டியின் மேல் அக்கினித் திராவகம் வீசப்பட்டது: ஆசிட் பல்புகள் சர்சர்ரென்று சுழன்று சுழன்று வந்து வண்டிமேலே வட்டமிட்டன எறிந்த கற்களைப் போல தொடர்பாகப் அவை பறந்து வந்தன. சிவகாமி அம்மையார் செய்த அறப் பயனோ - என்னவோ, வீசப் பட்ட திராவகப் பல்புகள் எல்லாம் குறி தவறித் தவறிக் காமராஜ் மேல் படாமல், குதிரைகளுக்கு முன்னாலேயே குப்குப்பென்று விழுந்து உடைந்து சிதறின. கடிவாளக் கட்டுப்பாட்டை மீறி, கண்டவாறு ஓடிய பரிகளை, ஊர்வல மக்கள் அதன் பின்னாலேயே ஒடி அடக்கிக் கொண்டே வந்தார்கள்:வீழ்கின்ற பல்புகளின் திசைநோக்கி விர்ரென்று ஓடியது கூட்டம் சிதறியது அணி சீறிக் கொதித்தனர் மக்கள்! பாய்ந்து ஓடினர்; அவர்களிடம் பல்புகள் வீசியவர்கள் சிலர்பிடிபட்டார்கள்! தலைவர்காமராஜ் பிடிபட்டவர்களை அடிக்க வேண்டாம், எந்த விதத் தொல்லைகளையும் கொடுக்க வேண்டாம் என்று கூறினார்: கொடிகளின் கம்புகளையே ஊர்வலத்தினர் ஆயுதமாகப் பயன்படுத்தி, காங்கிரஸ் துரோகிகளை விரட்டியடித்தார்கள்! தேசபந்து சித்தரஞ்சன்தாஸ் திடலை ஊர்வலம் வந்தடைந்தது! மக்கள் மகிழ்ச்சியோடு அவரவர் கிராமங்களுக்கு அமைதியாகத் திரும்பினார்கள்!