பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. காமராஜ் - இராஜாஜ உட்கட்சிப் பனிப்போர்! தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் திரு எஸ். சத்தியமூர்த்தி ஐயர் தேர்ந்தெடுக்கப்பட்டார் அவரைக் கட்சியின் தலைவராக மட்டுமல்ல; தனது அரசியல் ஆசானாகவும் தலைவர் காமராஜ் ஏற்றுக் கொண்டார். போலீசை சலாம் போட வைப்பேன்! அதனால், 1937 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், தனது ஆசானை ஏதாவதொரு தொகுதியில் போட்டியிட வைத்து, அவரை அமைச்சரவை அமைக்கச்செய்யவேண்டு மென்று காமராஜ் அவாவுற்றார். ஏனென்றால், நாவலர் சத்தியமூர்த்தி அவர்கள், காங்கிரஸ் கட்சியால் நடத்தப்படும் கூட்டங்களில் பேசும் போது 'எந்தக் காவல்துறை எங்கள்மீது வெடிகுண்டு பொய்வழக்குப் போட்டதோ, எந்தக் காவல்துறை காங்கிரஸ்காரர்களைத் தடிகொண்டுத் தாக்கி ரத்தத்தைக் கொட்ட வைத்ததோ, அதே காவல்துறைக்காரர்களைக் கதர்குல்லாய்களுக்குச் சலாம் போடவைக்கிறேனா இல்லையா? என்று பாருங்கள்” என்று ஓங்காரமாக வலியுறுத்திப் பேசுவார் அத்தகைய ஆற்றல் பெற்ற தமது குருவை அமைச்சராக்க வேண்டும் என்பதே தலைவர் காமராஜ் குறிக்கோள் அந்தச் சபத இலட்சியத்தை நடைபெறாதவாறு இராஜாஜி ஒரு சூழ்ச்சி செய்துவிட்டார் அதை நம்பிஏமாந்தார்காமராஜ் என்ன சூழ்ச்சி அது? எப்படி நடந்தது? எதற்காக ஏமாற்ற மடைந்தார் காமராஜ் யார் யாருக்கும் இடையே இந்த அரசியல்திருவிளையாடல்கள் நடந்தன? சென்னை மாநில சட்டசபைக்கு ஒரே ஒரு பல்கலைக் கழகப்பட்டதாரிகள் தொகுதி இருந்தது. அதில் போட்டியிட எஸ். சத்தியமூர்த்தி ஐயர் எல்லா ஏற்பாடுகளையம்முன்கூட்டியே செய்து வந்தார்.