பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 1.65 இந்தத் தொகுதியில், இராஜாஜி அவர்கள் போட்டியிடப் போவதாகத் திடீரென்று அறிவித்தார். அதனால், அத்தொகுதியை அவருக்கு விடடுக் கொடுக்கவேண்டும் என்று இந்து நாளேடு சீனிவாசன் போன்ற சத்தியமூர்த்தியின் நெருக்கமான நண்பர்கள் அவரைக் கேட்டுக் கொண்டார்கள்! அதற்கேற்ப, சத்தியமூர்த்தி தனது நண்பர்களின் வாக்கு நாணயத்திற்காகப் பெருந்தன்மையோடு அவர் அந்தத் தொகுதியை ராஜாஜிக்கு விட்டுக் கொடுத்தார்: மீஞ்சூர் எம். பக்தவச்சலம், செங்கல் பட்டுத் தொகுதியில் போட்டியிட வேட்பாளராக நின்றார், அவரது அந்தத் தொகுதியை எஸ்.சத்தியமூர்த்திக்கு விட்டுக் கொடுப்பதாக, அவர் மனமார, வலிய, வற்புறுத்திக் கூறினார்! ஆனால், ஏற்க மறுத்துவிட்டார் சத்தியமூர்த்தி அந்தத் தொகுதியை! அந்தத் தேர்தலில் சத்தியமூர்த்தியின் நாவன்மை, திறமை, ஜஸ்டிஸ் கட்சி வேட்பாளர்களைத் திணறடித்தன. அதனால், அவரை மத்திய சட்டசபையிலேயே உறுப்பினராகப் பணியாற்று மாறு காங்கிரஸ் நண்பர்கள் அவரை வேண்டினார்கள்! இராஜாஜி வாக்குறுதி! சத்தியமூர்த்தி, தமிழ்நாட்டின் அமைச்சராக வேண்டும் என்ற காமராஜின் ஆசையை நிறைவேற்றுவோம் என்று, மற்ற தலைவர்கள் ஓர் உத்திரவாதமான வாக்குறுதியை எல்லாருடைய சார்பிலும் ராஜாஜி கொடுத்தார். அதைக் காமராஜும் நம்பினார்: 'சென்னை மாநிலத்தில், காங்கிரஸ் கட்சி அமைச்சரவை அமைக்குமானால், சத்திய மூர்த்தி அந்த அவையிலே சேர்த்துக் கொள்ளப் படுவார்' என்று, இராஜாஜி சத்திய மூர்த்தியைத் தனிமையில் சந்தித்து வாக்குறுதி தந்தார் ஐயர்அந்த வாக்குறுதியை நம்பினார்: ஆனால், சென்னை மாநிலத்திலே 159 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. காங்கிரஸ் அமைச்சரவை அமைக்கும் பேச்சு வார்த்தைகள் நடந்த வண்ணம் இருந்தன! தமிழ் நாட்டில் மந்திரிசபை அமைப்பதற்கு முன்பு, மத்திய சட்டசபையின் உறுப்பினரான சத்திய மூர்த்தி டெல்லிக்குப் புறப்பட்டார்!