பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 Ggáuż zsposuismo": புறப்படுவதற்கு முன்பு அவர், இராஜாஜியைச் சந்தித்தார்! “அமைச்சர் அவையில் நீங்களும் ஒர் அமைச்சராவதற்காக, மேல் சட்ட சபையில் உறுப்பினராக நியமிக்கப்படுவீர்கள். சட்டசபை தொகுதியில் நீங்கள் போட்டியிடத் தேவையில்லை’ என்று இராஜாஜி, சத்தியமூர்த்திக்கு வாக்குக் கொடுத்தார்: சத்தியமூர்த்தி, இராஜாஜி நாக்கின் நாணயத்தை நம்பி, அவர் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். போகும் வழியில் பம்பாய் நகரில் இறங்கினார்; சர்தார் வல்லபபாய் பட்டேலைச் சென்று சந்தித்தார்; இராஜாஜி கொடுத்த தனிமை வாக்குறுதியை அவர் படேலிடம் கூறினார். சென்னையில், இராஜாஜி தலைமையில் வி.வி.கிரி, உட்பட்ட 9 பேர்கள் அமைச்சரவை அமைக்கப்பட்டுவிட்டதையும், மேல் சட்டசபை உறுப்பினராகியதிருச்சிவழக்குரைஞர்டி.எஸ். எஸ்.ராஜன் பெயர் நியமனம் செய்யப்பட்டு, அவர் அமைச்சரான விவரங்களையும் படேல், சத்தியமூர்த்தியிடம் விவரித்தார். 'ஆச்சாரியார் என்னைக் கவுன்சிலுக்கு நியமித்து, அமைச்சராக்குவதாக வாக்களித்து ஏமாற்றிவிட்டார்!" என்று படேலிடம் சத்தியமூர்த்தி வருத்தப்பட்டவாறே டெல்லி போனார். இராஜாஜி ஏமாற்றியது சத்தியமூர்த்தியை அல்ல; நாம்தான் அவரிடம் ஏமாந்து விட்டோம்” என்று உள்ளுர எண்ணிய காமராஜ், தனது அரசியல் ஆசானைநம்ப வைத்துக்கழுத்தறுப்பதைப் போல பழி வாங்கி விட்டாரே ராஜாஜி என்று காமராஜர் வருத்தப்பட்டார்! “கதர்க்குல்லாப் அணிந்தவர்களுக்குக் காவல்துறையைச் சேர்ந்தவர்களைச் சலாம் போட வைக்கிறேன்' என்ற ஆழமான ஒரு தேசபக்தரை, இராஜாஜி தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளாமல் விட்டுவிட்டாரே என்ற ஒருநெருடல்காமராஜர் மனதை நெருடியபடியே இருந்தது! மதுரை மாவட்டம் வத்தலக்குண்டு நகரில், 1938-ஆம் ஆண்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கூட்டம் நடைபெற்றது. பிற்காலத்தில் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த திரு. பக்தவத்சலம் அவர்களின் மாமனாரான திரு. சி.என். முத்துரங்க முதலியார் தலைவர் தேர்தலில் வெற்றி பெற காமராஜ் அரும்பாடுபட்டார்: