பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 367 நகராட்சித் தலைவர் காமராஜ்! ஆனால், சத்தியமூர்த்தியை, முத்துரங்க முதலியாரை நிறுத்தி இராஜாஜி தோற்கடித்து விட்டார்: காமராஜ் உழைப்பு அத்தேர்தலில் விழலுக்கு இறைத்த நீராயிற்று 1938-ஆம் ஆண்டில் விருதுநகர் நகராட்சித் தேர்தல் நடைபெற்றது; காங்கிரஸ் வேட்பாளர்கள் எல்லா வார்டுகளுக்கும் போட்டியிட்டதில் 22 பேர்கள் வெற்றி பெற்றார்கள் காமராஜ் 6-வது வார்டில் இருந்து மறுமுறையும் வெற்றி பெற்றார்: வெற்றி பெற்ற 21 காங்கிரஸ் உறுப்பினர்களும், காமராஜ் அவர்களையே நகராட்சித் தலைவராகப் பதவியேற்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். நகராட்சித் தலைவர் என்பவர் உள்ளூரிலேயே இருந்து பொதுத் தொண்டு ஆற்றவேண்டியவர் நான் அடிக்கடி வெளியூருக்குப் போகும் நிலையினன்! நகராட்சித் தலைவர் பதவிக்கு வேறு எவரையாவது தேர்ந்தெடுங்கள்!” என்று மறுத்துவிட்டார்: அதற்குப் பிறகு, சங்கரபாண்டிய நாடார் என்பவர் விருதுநகர் நகராட்சித்தலைவராகத்தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுகாமராஜரிடம் உள்ள அரிய பண்பாடுகளிலே ஒன்று தமிழ்நாடுகாங்கிரஸ்கட்சியின் செயற்குழுத் தேர்தல் காமராஜ் அவர்கள் குறிப்பிட்டபடி 1939-ஆம் ஆண்டு நடைபெற்றது. 'நவசக்தி நாளேட்டின் ஆசிரியராகப் பிற்காலத்தில் இருந்த முருக -தனுஷ்கோடிஎன்பவரை, அப்போது அந்த தேர்தலில் போட்டியிடச் செய்தார்; அவரை எதிர்த்து சுப்பிரமணிய நாடார் என்பவர் போட்டியிட்டார். தலைவர் காமராஜ் பிடிவாதப் போக்கு! தனுஷ்கோடியின்வெற்றிக்காக, ஆறுநகர் வட்டங்களில் பிரசாரம் செய்யும் பணியையும், வாக்காளர்களை அழைத்துவந்து வாக்களிக்கச் செய்யும் பொறுப்பையும் கே.எஸ். முத்துசாமி ஏற்றிருந்தார். இதற்கிடையில் முத்துசாமிக்கும்-காமராஜ் அவர்களுக்கும் ஏதோ ஒரு மனத்தாங்கல் அதை இந்தத் தேர்தலில் சரிசெய்து கொள்ளஅவர் எண்ணினார். தனுஷ்கோடியிடம் சென்ற முத்துசாமி, உன்னுடைய தேர்தல் வேலைகளை நான் கவனிக்க வேண்டுமென்றால், காமராஜ் வந்து என்னிடம் கூறவேண்டும் என்றார்.