பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468 தேசியத் தலைவர் காமராஜர் தனுஷ்கோடி, தலைவர் காமராஜரிடம் சென்று முத்துசாமி கூறியதைச் சொன்னார் தனுஷ்கோடி தோற்றாலும் பரவாயில்லை, நான் முத்துசாமியிடம் கூற மாட்டேன் போ!' என்று காமராஜர் கூறிவிட்டார் மறுநாள் தேர்தல் வாக்குச் சாவடியில் வாக்களிக்கும் பெட்டிகள் காலை ஏழுமணிக்கே வந்திருக்க வேண்டும்! ஆனால், எட்டு மணியாகியும் ஒட்டுப் பெட்டிகள் வாக்குச்சாவடிக்கு வரவில்லை. தனுஷ்கோடி தனது எதிர்ப்பைத் தேர்தல் அதிகாரியாக இருந்த மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தெரிவித்தார் 'குறிப்பிட்ட நேரத்தில் வாக்குப் பெட்டிகள் வராததால், தனக்கு விழும் வாக்குகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று தனுஷ்கோடி அந்த அதிகாரியிடம் கூறியதோடு, தனது எதிர்ப்பை எழுதித் தருவதாகவும் அவர் கூறினார். அந்த நேரத்தில் காமராஜ் அங்கே வந்து விட்டார். அப்போது தேர்தல் அதிகாரி மீனாட்சி சுந்தரம் தனுஷ்கோடி கூறிய விவரத்தைக் காமராஜரிடம் விளக்கினார். அவ்வளவுதான் கோபம் வந்துவிட்டது அவருக்கு! “இதற்கு ஒரு ஆட்சேபமா? உனக்கு வெட்கமாக இல்லையா? போய் உன் வேலையைப் பார் என்று என்னைப் பார்த்துச் சீறினார் தலைவர் பிறகு, மீனாட்சி சுந்தரத்தைப் பார்த்து 'நீங்கள் ஒன்றும் இதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டாம்! மற்ற வேலைகளைப் பாருங்கள் என்று கூறிவிட்டு, அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார்! எதிர்பார்த்தபடியே கொஞ்சம் வாக்குகள் வித்தியாசத்திலேதான் தனுஷ்கோடி தோற்றார். பாவம். இந்த வருத்தத்தை முருக. தனுஷ்கோடிஅவர்கள், பிறகு 1975-ஆம் ஆண்டில் தாம் எழுதிய காமராஜ் ஒரு சரித்திரம்' என்ற நூலில், தன் மீது அவர் சீறி விழுந்த சம்பவத்தையும் அதன் பயனையும் குறிப்பிட்டுள்ளார்: நிருபர்கள் முன்னேகாமராஜர் கோபம்! “காமராஜ்முதலமைச்சராக இருந்தபோது, திரு. டபிள்யூ.ஆர்.எஸ். சத்தியநாதன் ஐ.சி.எஸ். என்பவர் தலைமைச் செயலராகப் பணியாற்றினார் ஒருநாள் அவர், அலுவலகத்தில் முதல்வரைப் பார்க்கச்சென்றார்.