பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி * 69 முதல்வர் அப்போது பத்திரிகை நிருபர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். 'இந்து', பத்திரிகைநிருபர் ஏ.கே. வெங்கடேசன், தேசிகாச்சாரி, வெங்கட் ராமன், பி.டி.ஐ. நிருபர் கல்யாணசுந்தரம் போன்றவர்கள் அவருடன் இருந்தனர். தலைமைச் செயலர் முதல் வரைப் பார்க்க விரும்பியதைத் தெரிவித்த போது, அவரை உள்ளே வரச் சொன்னார் காமராஜ்! அவரும் உள்ளே வந்து, அமர்ந்தார் நிருபர்களும் வெளியேறத் தயாரானார்கள்! காமராஜ் நிருபர்களை உட்காரச்சொன்னார் தலைமை செயலரை 'என்ன?’ என்று கேட்டார் அவர்சற்றுத் தயங்கியபடியே நின்றார்: 'பரவாயில்லை சொல்லுங்கள். அவர்கள் நான் சொல்லாமல் எதையும் பத்திரிகைகளில் வெளியிடமாட்டார்கள் என்றுதலைமைச் செயலரை வந்த விவரத்தைக் கூறுமாறு கேட்டார்: தலைமைச் செயலர் சற்றுத் தயக்கத்துடன், முதல்வரிடம் மெதுவாக, அப்போது பொதுப்பணித்துறையின் செயலராக இருந்த திரு. சீனிவாசன் ஐ.சி. எஸ். கோப்பு ஒன்றை எடுத்துக் கொண்டு, பொதுப்பணித்துறை அமைச்சரானதிரு. வி.இராமையா அறைக்குச் சென்று விவாதித்துள்ளார் அமைச்சர், அதற்கு உடனேகோபப்பட்டுக் கோப்பினைத் தூக்கி வீசி எறிந்து விட்டார் அச்செயல் தனக்குப் பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், பொதுப்பணி செயலர் அதற்காக வருத்தப்படுகிறார். இந்த சம்பவத்திற்கு என்ன செய்யலாம் என்று தன்னிடம் யோசனைக்கேட்டதாகவும், தலைமைச் செயலர் முதல்வரைப் பார்த்துவிட்டு வந்து பதில் கூறுவதாகக் கூறிவிட்டு வந்திருப்பதாகவும் காமராஜ் அவர்களிடம் அச்சத்துடனும் அடக்கத்துடனும் அறிவித்தார்: உடனே காமராஜர், தனது அந்தரங்கச் செயலாளர் திரு. பி. வி. கிருஷ்ணய்யாவைக் கூப்பிட்டு, அமைச்சர் இராமையாவைத் தனது அறைக்கு உடனே வருமாறு பணித்தார்: சிறிது நேரத்திற்கெல்லாம் அமைச்சர் இராமையா, முதல்வர் அறைக்கு வந்தார் வந்தவர்தன் செருப்பை முதலமைச்சர்அறைக்கு வெளியே விட்டு விட்டு உள்ளே நுழைந்தார்: வந்த அமைச்சர் ராமையா அவர்களைப் பார்த்து, நிருபர்கள் முன்பும் - தலைமைச் செயலாளர் நேரிலும், "உனக்கு புத்தி