பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17O. தேசியத் தலைவர் காமராஜர் இருக்கிறதா? நாம் ஐந்து வருடங்கள் இந்தப் பதவியில் இருக்கப் போகிறோம் அதிகாரிகள் அப்படியா? அவர்களிடம் இப்படி நடந்து கொள்ளலாமா? என்று, தலைமைச் செயலாளர் சொல்லியதைச் சொல்லி அவரிடம் இதுபற்றி தன் செயலுக்கு வருத்தம் தெரிவிக்கும்படி கூறினார். அமைச்சர்ராமையாஅவர்களும், முதல்வர்காமராஜ் கூறியவாறே வருத்தம் தெரிவித்துவிட்டு, பின்னர் வெளியேறினார் - பாவம்! இவ்வளவும் நிருபர்கள் முன்னிலையிலேயே நடந்தன! இது குறித்துப் பத்திரிகைகளில் ஒன்றும் செய்தியேதும் வெளியிட வேண்டாமென்றும் நிருபர்களைக் காமராஜ் கேட்டுக்கொண்டார். 'மூன்று முதல்வர்களுடன் என்ற நூலில், காமராஜ் அவர்களிடம் நேர்முக உதவியாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றிய பொ. க. சாமிநாதன் அவர்கள் எழுதியுள்ளதையே மேலே குறிப்பிட்டோம்: காமராசர் தன்னலமற்றவர்; கர்ம யோகி; பரந்த நோக்கத்தோடு கட்சியை வளர்க்க அயராது பாடுபட்டார் எல்லாம் உண்மைதான் ஆனால் வள்ளுவன் குறளுக்கு அவர் ஒர் உதாரணமாக அரசியலில் உலவினார் என்றார்கவியரசு கண்ணதாசன் அவர்கள் கண்ணதாசன் பேசுகிறார்! 'காமராஜரிடம் ஒரு கெட்ட சுபாவம் உண்டு - கோபம்!” 'சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி - இனமென்னும், ஏமப் புணையைச் சுடும்' - என்றான் வள்ளுவன் அந்தச் சினம் அவரிடம் மிகஅதிகம்!” 'இடந்தெரியாமல் கோபம்கொள்வார். ஒரு பெரிய தலைவருக்கு அது நியாயமாகாது!” "அது என்னமோ, அதை ஒரு நியாயம் மாதிரி எல்லோரும் ஒப்புக்கொண்டு விட்டோமே தவிர, அது முறையாகாது” "தலைவர் காமராஜ் அவர்களிடம் நாணயம், திறமை இரண்டும் அவரிடம் குடிகொண்டிருந்தன; ஆனால், ஒரு சுபாவம் அவரிடமிருந்தது." 'இன்னொருவன்மேலேறி வரும்பொழுது அவனைத்தலையைத் தட்டி வைததுக் கொண்டே இருப்பதுதான் ராஜதந்திரம் என்ற முறையில், நான் முன்னே சொன்னது போல அவர் நடந்து கொண்டுதான் இருந்தார்'