பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 171 தமிழ் நாட்டு அரசின் அரசவைக் கவிஞராக மக்கள் திலகம் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களால் நியமிக்கப்பட்ட, கவியரசு கண்ணதாசன் அவர்கள் "நான் பார்த்த அரசியல்' என்றொரு நூலை எழுதினார். அந்த நூலுக்குள்ளே ஓர் அத்தியாயம், நான் பார்த்த தலைவர்கள் என்பது! தலைவர் காமராஜ் அவர்களைப் பற்றி எழுதியிருப்பதைத்தான் மேலே அவர் வாயிலாகவே பேச வைத்தோம்! இதற்குக் காரணம் என்ன? இயற்கையாகவே காமராசருக்கு அமைந்த முன்கோபம் என்றே சொல்லலாம்! இந்தக் கோபம்தான், காங்கிரஸ் தொண்டர்களை அவரிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பை இழக்கச் செய்துவிட்டது எனலாம்! 'உதாரணமாக. நான் பேரறிஞர் அண்ணா அவர்களிடம் இரண்டாண்டுகளுக்குக் குறைவாகவே நெருங்கிப் பழகினேன்! காமராசருடன் ஏழெட்டு ஆண்டுகளுக்குமேல் நெருங்கிப் பழகியுள்ளேன். ' 'மணியடித்துக் கூப்பிடுவார். ஏதோ நினைவில், அவருக்குப் போன் செய்’ என்பார் நான் யாருக்கு என்று கேட்டால் உடனே முன்கோபம் வந்து, ஏதாவது சொல் வார்! அடுத்து தவற்றை உணர்ந்து, இன்னாருக்குப் போன் செய்' என்பார்!’ - என்று திரு. பொ. க. சாமிநாதன் அவர்கள் தனது மூன்று முதல்வர்களுடன் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கான தலைவர் தேர்தல் 1940-ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் நாள், சென்னை இந்தி பிரசார சபை மண்டபத்தில் நடைபெற இருந்தது! புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிஉறுப்பினர்கள்.203 பேர் அங்கே வந்திருந்தார்கள். அந்த ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கான புதிய தலைவர், ராம்கார்நகரில் நடைபெறப்போகும் அகில இந்திய காங்கிரஸ் மகா சபைக்குரிய தலைவர், தேர்தலில் யாரை ஆதரித்து தேர்வு செய்வது, அந்த காங்கிரஸ் மாநாட்டிற்குச் செல்வதற்குரிய தமிழ்நாட்டுப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பது போன்ற செயல்களுக்கான எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தன இராஜாஜி, இந்தி பிரசார சபா மேடையிலே அமர்ந்து, கை ராட்டையில் நூல் நூற்றுக்கொண்டிருந்தார்: