பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 72 தேசியத் தலைவர் காமராஜர் திருச்சிராப்பள்ளி நகரைச் சேர்ந்த டாக்டர் சாமிநாத சாஸ்திரி; தமது நூல் நூற்கும் தக்களியைச் சுழற்றிக் கொண்டிருந்தார். மாநாட்டிற்கு வருகை தந்திருந்த காங்கிரஸ் உறுப்பினர்கள், தங்களுக்குள்ளேயே ஏதோ குசு குசுவென கிசு கிசுத்துக் கொண்டிருந்தார்கள் சபாவில் ஏதோமுணுமுணுப்பும் பரபரப்பும் காணப்பட்டது! 1938, 1939 இந்த இரண்டு ஆண்டுகளிலும், நடைபெற்றத் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தேர்தல்களில், திருவாளர்கள், சி. என். முத்துரங்கமுதலியாரையும், ஓமந்தூர்இராமசாமி ரெட்டியாரையும், இராஜாஜி அவர்கள் இரண்டுமுறைகளும் சொல்லி வைத்தாற்போல சத்தியமூர்த்தி ஐயரை நிறுத்தி வைத்துத் தோற்கடித்தார்: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் ஒமந்துார் ராமசாமி ரெட்டியாரை ராஜாஜி வலிய நிறுத்தி, மீண்டும் எஸ். சத்தியமூர்த்தியைத் தோற்கடித்தார். அந்த தெம்பான மகிழ்ச்சியில் அப்போது அந்த மேடையிலே வீற்றிருந்தார் இராஜாஜி, எந்த ஒருவித முன்னறிவிப்பும் இல்லாமல், கோவை அய்யாமுத்து அவர்களை ராஜாஜி அழைத்தார். 1940 - ஆம் ஆண்டுக்கானதமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவிக்காக, கோவை சி.பி. சுப்பையா அவர்களின் பெயரை, அவரை முன்மொழியுமாறு இராஜாஜி கூறினார்: கவிஞர் கோவை அய்யாமுத்து, காங்கிரஸ் கட்சியில் இராஜாஜியின் பக்தர்! பிற்காலத்தில் சுதந்திரா கட்சியைக் காங்கிரசுக்கு எதிராகத் தோற்றுவித்தபோதும் அவர் இராஜாஜியின் அணுக்க அன்பர்! எப்போதும், இராஜாஜி சொல்லை எந்த நேரத்திலும் தட்டிக் கழிக்காதவர்கள் என்ற பட்டியலில் முதல் வரிசையில் இடம் பெற்றவர் அவர். கோவை சுப்பையாவுக்கு போட்டியாக காமராஜ் அவர்கள், சத்தியமூர்த்தி ஐயரைத்தலைவர்பதவிக்கு முன்மொழியப் போகிறார் என்ற திட்டத்தைக் காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கு வந்திருந்த பிரதிநிதிகள் உணர்ந்தார்கள். திருவாளர்கள் காமராஜ் - சி. பி. சுப்பையா இருவரும் காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு வலதுகை - இடதுகை போன்று உழைப்பவர்கள்! ஆரம்பக் கல்வி மட்டும் அவர்கள் பெற்றவர்கள் என்றாலும், சாமான்யத் தொண்டர்கள்!