பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 173 இந்த இருவரில், யார் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்குத் தகுதியானவர்கள்? என்று, தரம் பிரிக்க முடியாத தேசபக்தர்கள். - கடந்த ஆண்டில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவிக்கு எஸ். சத்தியமூர்த்தி ஐயரும், ஓமந்துார் ராமசாமி ரெட்டியாரும் போட்டியிட்டார்கள். அந்த இருவருமே அந்தப் பதவிக்கு மிகத் தகுதியானவர்கள்தான் என்பதில், யாருக்குமே எவ்விதக் கருத்து வேற்றுமையும் கிடையாது. சத்தியமூர்த்தி, பிராமணர்; ரெட்டியார் பிராமணர் அல்லாதவர்! ரெட்டியார் எந்த அணியையுமே சாராத தமிழ்நாட்டுக் காந்தி! சுயேச்சையானவர்: 1937ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில், மதுரைமாநகரிலே உள்ள பி.டி. ராஜன் ஒருவர் மட்டுமே ஜஸ்டிஸ் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். செட்டிநாட்டுப்பகுதியில் நீதிக்கட்சியின்துரணாக நின்றவர்ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார். காரைக்குடியில் அவர் மருமகனாரான வெங்கடாசலம் செட்டியார் ஜஸ்டிஸ் கட்சி வேட்பாளராகநின்று, காங்கிரஸ் வேட்பாளர்நாகப்ப செட்டியாரிடம் தோற்றார்: இராமநாதபுரம் தொகுதியலே முக்குலத்தைச் சேர்ந்த மன்னர் சேதுபதி ஜஸ்டிஸ் கட்சி சார்பாகத் தமிழக சட்டசபைக்குப் போட்டியிட்டார். அந்த மன்னரின் செல்வாக்கை எதிர்த்துப் பசும் பொன் முத்துராமலிங்கதேவர் காங்கிரஸ் கட்சி சார்பாக நின்றார் தேவரின் தந்தையாரான உக்கிரபாண்டியத் தேவரே தன் மகனை எதிர்த்து, சேதுபதி மன்னருக்காகத் தேர்தல் பணி புரிந்தும் முத்துராமலிங்க தேவரே வெற்றி பெற்றார்: சர். ஆர். கே. சண்முகம் செட்டியார்கோவை விஞ்ஞான மேதை ஜி. டி. நாயுடு போன்றவர்கள் எல்லாம், காங்கிரஸ் மஞ்சள் பெட்டி முன்பு தோல்வி கண்டார்கள்! எஸ். சத்தியமூர்த்தி, எஸ். சீனிவாச ஐயங்கார், பசும்பொன் தேவர் அனைவரும், தலைவர் காமராஜ் அவர்களுக்குக் காங்கிரஸ் முன்னோடிகளாக முனைப்போடு கட்சிப் பணியாற்றியவர்கள். அவர்களின் அடியொற்றியே தலைவர் காமராஜரும் பணியாற்றினார்.