பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174. தேசியத் தலைவர் காமராஜர் மற்ற ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் அனைவருமே காங்கிரஸ் கட்சியெனும் புயலால் வேரோடு சாய்ந்து பரிதாபமாகச் தோல்வி கண்டவர்களாவர். அந்த ஜஸ்டிஸ் கட்சி உயிரோடு கொடி உயர்த்தி உலா வந்தபோது, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தேசிய நீரோட்டம் பெற்று, வகுப்புவாதக் காற்று மிக லேசாக எப்போதோ ஒருமுறை வீசியபடியே விளங்கியது! ஆனால், ஜஸ்டிஸ் கட்சி வேரோடு சாய்ந்து படுதோல்வி கண்ட பின்னர்தான், பிராமணர்-பிராமணரல்லாதார் என்ற வகுப்பு வாதம் எப்படியோ காங்கிரஸ் கட்சிக்குள் ஊடுருவி விட்டது; அதற்கு இராஜாஜி - சத்திய மூர்த்தி அணிகளே பொதுக் காரணமாகவும் காட்சி தந்தன எனலாம்! 1939-ஆம் ஆண்டில் திரு சத்திய மூர்த்தி ஐயர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் தோற்ற பின்னர், அந்த உணர்ச்சி காங்கிரஸ் கட்சிக்குள்ளே ஓர் உத்வேகத்தை உருவாக்கி விட்டது! கோவை சி. பி. சுப்பையா வெற்றி பெற்றால் தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியில் ராஜாஜி அவர்களது ஆதிக்கம் தலை தூக்கி ஆடும்! காமராஜ் அவர்கள் வெற்றிபெற்றால் சத்திய மூர்த்தி பலம் ஓங்கி விடும் இதுதான் தமிழ் நாட்டில் அந்த அணிகளுக்கு எதிரெதிராக அன்றிருந்த காங்கிரஸ் கட்சியின் நிலை! சுப்பையாவைத் தவிர வேறு யாரையாவது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைமைப் பதவிக்கு நிறுத்தலாம் என்ற கருத்து ஒரு சில காங்கிரஸ்காரர்களிடமும் இருந்தது! அதனால், கோவை ஐயாமுத்து போன்றவர்கள் சுப்பையா பெயரை முன் மொழிய இராஜாஜியே வற்புறுத்தி, வலியுறுத்திக் கூறியும் கூட, அவர் பேச்சை என்றுமே தட்டாத கவிஞர் அய்யாமுத்து மறுத்துவிட்டார். அதுபோலவே வேறு சிலரும் கூட மறுத்துவிட்டார்கள். ஆனால், துரதிருஷ்ட வசமாகத் திரு சுப்பையா பெயரைத் எம். பக்தவத்சலம் மாமனாரானசி.என். முத்துரங்க முதலியார்முன் மொழிந்தார். காமராஜ் அவர்கள் பெயரைத் சத்திய மூர்த்தி முன்மொழிந்தார்! போட்டி மிகக் கடுமையாக உருவாகி விட்டது .