பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 1 75 பனிப்போர் களத்தில் காமராஜ் வெற்றி! வாக்குகள் எண்ணப்படும் ஒரே பரபரப்பு யார் வெற்றிப் பெறுவார்கள் என்ற அதிர்ச்சி அந்தந்த அணியினரிடையே அலைமோதி ஆடியது! காமராஜ் அவர்கள் 103 ஓட்டுக்கள் பெற்றுத் தனது அரசியல் ஆசான் சத்திய மூர்த்தியை இருமுறை தோற்கடித்த ராஜாஜி அணியை வீழ்த்தி வெற்றிவாகை சூடினார். நூறு ஒட்டுக்கள் பெற்ற சுப்பையா தோல்வியைத் தழுவினார்: காமராஜ் அவர்கள் அன்று பெற்ற அந்த மூன்றே - மூன்று வாக்குகள் வித்தியாசம்தான், காங்கிரஸ் கட்சிக்கும் - அரசியல் சூழ்நிலைகளுக்கும் தமிழ்நாட்டின் தலைவிதியை மாற்றும் வித்தியாச ஒட்டுக்களாக அமைந்தன! 1919-ஆம் ஆண்டில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சாதாரணத் தொண்டராகச்சேர்ந்த காமராஜ் அவர்கள், தனது தளராத உழைப்பால், இருபத்தோராண்டுகள் அவராற்றிய அரிய சேவைகளால், தமிழ் நாட்டுக் காங்கிரஸ் கட்சியின் தன்னிகரற்றத் தலைவராகத் தோற்றமளித்தார்: சத்திய மூர்த்தி அவர்கள், எவ்வித பேதமும் காட்டாமல், தேசபக்தியே தனது மதம் என்றும், காங்கிரஸ் கட்சியே சாதி என்றும் கருதி, காமராஜ் அவர்களுக்குத் துணை நின்று, அவர்கையைப் பலப்படுத்திட, அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளரானார்: அப்போது ஆகஸ்டுப்புரட்சிகாரணமாகக்காங்கிரஸ்கட்சி 1942-ல் தடைசெய்யப்பட்டிருந்தது. 1943-ஆம் ஆண்டில் திரு சத்தியமூர்த்தி மறைந்தார். அந்த நேரம், காமராஜ் அவர்கள் ஆகஸ்டுப் புரட்சிப் போர்ாட்டத்தில் ஈடுபட்டு சிறையிலே இருந்தார். காமராஜ், அரசியலில் நன்றி மறவாத நாயகன் தனது ஆசான் பெயரையே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக் கட்டிடத்துக்குச் சூட்டி சத்தியமூர்த்தி பவன் என்று அழைத்தார். அந்தக் கட்டிடத்தில்தான் இன்றும் காங்கிரஸ் கட்சி அலுவலகம் நடந்து வருகிறது. 1956-ஆம் ஆண்டு ஆவடி நகரில் நடைபெற்ற அகில இந்தியக் காங்கிரஸ் மாநாட்டின் திடலுக்கும், அந்த ஊருக்கும் சத்தியமூர்த்தி நகர் என்றே பெயரிட்டார் இன்றும் அந்த ஊர் அழகு நகராக விளங்கிப் பெரு நகரமாக மாறிவருகிறது!