பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

476 தேசியத் தலைவர் காமராஜர் அந்த ஆண்டின்அகில இந்தியக் காங்கிரஸ்கட்சியின்தலைவராக, மெளலானா அபுல்கலாம் ஆசாத் அபார வெற்றி பெற்றார்: அந்த நேரத்தில், இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது. சென்னை மாகாண ஆளுநராக இருந்த சர். ஆர்தர் ஹோப், அப்போது போர்நிதி வசூலித்துக்கொண்டிருந்தார். ஆங்கிலேயர் ஆட்சிக்குப் போர் நிதி தரவேண்டாம் என்று தமிழ்நாடுமுழுவதும்காமராஜ் அவர்கள் சூறாவளிச்சுற்றுப்பயணம் செய்தார். இதனால் யுத்த நிதி வசூல் தடைபட்டது. காமராஜ் அவர்கள் மீது பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கடுங்கோபம் கனன்றது. அதனால், அவரைக் கைது செய்து வேலூர் சிறையிலே வைத்தார்கள்! இது காமராஜ் அவர்க்ளின் மூன்றாவது சிறை வாசமாகும்; தனிநபர்சத்தியாக்கிரகம்அப்போது வெகுவேகமாக நடைபெற்று வந்த நேரம் அந்த சத்தியாக்கிரகத்தில் கலந்து கொள்வது என்றால், காந்தியடிகளின் முன் அனுமதி பெற வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் சத்தியாக்கிரக விதியாக விளங்கியது. அந்த அறப்போரில் யார்யார்கலந்து கொள்கிறார்கள்என்பதற்கான ஒரு பட்டியலைக் காமராஜ் அவர்கள் கொண்டு சென்றபோது தான், கூடுர் என்ற ஆந்திர மாநில எல்லையிலே உள்ள இரயில் நிலையத்திலே அவர் கைது செய்யப்பட்டார் காந்தியடிகளின் தனி நபர் சத்தியாக்கிரகத்தில் நகராட்சித் தலைவர்கள் எல்லாரும் சட்டத்தை மீறிச்சிறை செல்ல வேண்டும். அதற்கேற்ப, விருதுநகர், நகராட்சித் தலைவர் சங்கர பாண்டிய நாடார் சட்டத்தை மீறினார்: சிறை சென்றார் காமராஜ் அவர்கள் கைதுசெய்யப்படுதவதற்கு முன்பு ஒர்அறிக்கை விடுத்தார். அவர்சிறை செல்வதால், தனக்குப்பிறகு வேலுர்ஜனாப், உபயதுல்லா அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து பணியாற்ற வேண்டும் என்று அந்த அறிக்கையில் அவர் கேட்டுக் கொண்டார் விருதுநகர் சங்கர பாண்டிய நாடார், சத்தியாக்கிரகச் சட்டத்தை மீறிச் சிறை சென்று விட்டதால், விருதுநகர் நகராட்சிக்குப் புதிய தலைவர் தேர்வுசெய்ய, 1941-ஆம் ஆண்டு மே மாதம் 81-ஆம் நாள் குறிக்கப்பட்டது. நகரசபைத் தலைவர்யார்? என்று பரபரப்பு ஏற்பட்ட நேரத்தில், வேலூர்சிறையிலே உள்ளகாமராஜ் அவர்களையே, விருதுநகர்நகர சபை உறுப்பினர்கள் தமது தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள்!