பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 177 காங்கிரஸ் இயக்கம் தடை செய்யப்பட்டு விட்டதால், காங்கிரஸ்காரர்கள் பகிரங்கமாகக் கூடி நாட்டுப் பணிகளை ஆற்ற முடியவில்லை. தடை செய்யப்பட்ட காங்கிரஸ்காரர்கள், காங்கிரஸ் சங்கம் என்ற ஒரு சங்கத்தை அமைத்து, தலைமறைவாகத் தேசத் தொண்டுகளைச் செய்து வந்தார்கள். முத்துரங்க முதலியாரால் அரியலூரில் காங்கிரஸ் சங்கம் எஸ்.கே. பாட்டில் தலைமையில் கூடி, ஆகஸ்டுப் புரட்சியில் கலந்து கொள்ளாமல் விலகியிருந்த காங்கிரஸ்காரர்களை, மீண்டும் கட்சியில் சேர்க்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். அப்போது, காமராஜ் மத்திய பிரதேச அமேதி சிறையில் இருந்தார். இந்தத் தீர்மானம் ராஜாஜி தனக்காவே தீட்டப்பட்டது என்று கருதினார்: சத்தியமூர்த்தி மறைந்த பின்பு, காமராஜ் அவர்களை ராஜாஜி அணியில் சேர்த்திட அந்த அணி அரும்பாடுபட்டது. திருவண்ணாமலை அண்ணாமலைப் பிள்ளை வீட்டில், இதற்கான பேச்சு வார்த்தை நடந்தது. காமராஜ் அதிருப்தி ஏற்பட்டு விருதுநகருக்கே திரும்பிப் போய் விட்டார். ஆசான் மேயர் மாணவர் சேர்மென்! வங்கத்தில் தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் அவர்கள் சிறையிலே இருந்தபோது, அவரே நகர சபை மேயராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். அதனைப் போல, காமராஜ் அவர்களையே விருதுநகர் நகரசபைத் தலைவராக, அதன் உறுப்பினர்கள் தேர்வு செய்தது; வெள்ளையராட்சிக்கு விடப்பட்டதோர் சவாலாகவே அமைந்தது. சென்னை மாநகராட்சியின், மேயராக அப்போது எஸ். சத்தியமூர்த்தி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் காமராஜ் அவர்களது அரசியல் குரு சென்னை மேயர் அவருடைய அரசியல் மாணவரான காமராஜ் விருது நகர் நகராட்சித் தலைவரா என்று சிலருக்குப் பொறாமையும் பொங்கி எழுந்தது! 1942-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வாரத்தில், காமராஜ் சிறையினின்று விடுதலை செய்யப்பட்டார்! விருதுநகர் விழாக்கோலம் பூண்டு - அவரைக் கோலாகலமாக வரவேற்று மகிழ்ந்தது! விருதுநகர் நகரசபை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில்,