பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 தேசியத் தலைவர் காமராஜர் காமராஜ் ஒருநாள், திடீரென நகரசபை உள்ளே புகுந்தார் எல்லா உறுப்பினர்களும் நகராட்சி அதிகாரிகளும் எழுந்து நின்று அவரை வணங்கி வரவேற்றார்கள்! நகர சபைத் தலைவர் அமரும் இருக்கையில் திரு. காமராஜ் அமர்ந்தார்.91 வது தீர்மானம் அப்போது நிறைவேற்றப்பட்டதை அவர் பதிவு செய்துவிட்டு எழுந்தார்: "என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்ததைப் பற்றி நான் சந்தோஷப்படுகிறேன். எனக்கு தமிழ்நாடு முழுவதுமான வேலைகள் இருக்கின்றன. ஆகவே, என்னால் நகரசபைத் தவைர் வேலையைப் பார்க்கமுடியாது. நான் பதவியிலே இருந்து விலகிக் கொள்கிறேன்" என்று, பேசி விட்டுத் தனது பதவி விலகல் கடிதத்தைத் துணைத் தலைவரிடம் கொடுத்து விட்டுச் சென்று விட்டார்: அதைக் கண்ட அதிகாரிகளும் உறுப்பினர்களும் அவருடைய பதவிப் பற்றற்ற இலட்சியத்தைக் கண்டு வியந்தார்கள்! பாராட்டினார்கள்: சத்தியமூர்த்தி, சென்னை மாநகராட்சி மேயர் ஆவதற்காகத் திரு காமராஜ் கடுமையாக உழைத்தார் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் இடையே, அவருக்குரிய தகுதியையும், மரியாதையையும் தேடித் தந்தவரே திரு. காமராஜ்தான். காரணம், அவர் கள்ளங்கபடமற்றவர். வஞ்சனை, சூது, பொய்வாக்குகளை பிறருக்குத் தந்து ஏமாற்றும் நரித்தனம் அவரிடம் எப்போதும் இருந்ததில்லை. அதனால், சத்தியமூர்த்திக்கு காங்கிரஸ் கட்சி அரணாய் காமராஜ் விளங்கினார் காமராஜைக் கலந்தாலோசிக்காமல் - சத்தியமூர்த்தி எந்தக் கட்சி வேலையையும் செய்யமாட்டார் எந்த நேரமானாலும் சரி, இருவரும் கூடிக் கலந்தே எதையும் செய்யும் பண்பாளர்களாக, நண்பர்களாக, ஆசான் - மாணவர்களாக விளங்கினார்கள் என்பது தமிழக அரசியல் உலகம் அறிந்த ஒன்று! சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவியைத் சத்தியமூர்த்திக்குக் கொடுப்பதாக ஆங்கிலேய அரசு கூறியது. உடனே அவர் தனது அன்பரான காமராஜ் அவர்களிடம் ஆலோசனைக் கேட்டார்: