பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 179 "தனிப்பட்டவர்கள் சட்டமறுப்புப் போரை காந்தியடிகள் நடத்தக் கட்டளையிட்டிருக்கிறார். அதில் நீங்கள் கலந்து கொள்ளாமல், துணைவேந்தர் பதவியை ஒப்புக்கொண்டால், உங்களுடைய எதிர்கால அரசியல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று யோசித்தீர்களா? அந்தப் பதவியை நீங்கள் ஒப்புக் கொள்ளக் கூடாது' என்று திட்டவட்டமாகக் காமராஜ் கூறிய யோசனையைத் சத்தியமூர்த்தி ஏற்றார். பிறகு, அந்தப் பதவியை வேண்டாமென்ற மறுத்துவிட்டார். சத்தியமூர்த்தி நாவன்மை சத்தியமூர்த்தி அவர்களுக்கு, காமராஜ் நம்பிக்கையின் பலமாக உதவினார்! அரசியலில் அவருக்காக எதையும் செய்யக்கூடிய ஆபத்துக் கால நண்பராக, உதவியாளராக, மாணவராகவே அவர் சாகும்வரை விளங்கினார் காமராஜ் அந்த சக்தி அவருக்கு எவ்வாறு உருவாயிற்று? தமிழோ, ஆங்கிலமோ இந்த இரண்டு மொழிகளிலும் மேடையேறிப் பேசி - எதிரியை வீழ்த்துவதில் மிகத் திறமையான நாவன்மை உடையவர் சத்தியமூர்த்தி அவருடைய சொற்கள் கேட்டோரை வீறு கொள்ளச் செய்யும் ஆற்றலுடையன எதிரியின் வாதங்கள் அவர் முன்னே எழுந்து நிற்க முடியாமல் சக்தியற்று விழும்! அந்த வாதத்திறமை அவருக்குக் கைவந்த கலை! காங்கிரஸ் கட்சித் தோழர்கள் இரவு நேரங்களில் ஜஸ்டிஸ் கட்சியால் தாக்கப்பட்டபோது, சட்டசபையில் சத்தியமூர்த்தி லார்டு வில்லிங்டன்ஆட்சியைப் பார்த்துச்சவால்விட்டுப் பேசினார்: 'பகலிலே காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது; இரவிலே குண்டர்கள் ஆட்சி நடக்கிறது; அப்படியானால், வில்லிங்டன்துரைஅவர்களே உமது சூழ்ச்சி எங்கே நடக்கிறது?’’ சைமன் கமிஷனை எதிர்த்துக் காங்கிரஸ்காரர்கள் நடத்திய போராட்டத்தின்போது, சத்தியமூர்த்தி இவ்வாறு சவால்விட்டுப் பேசினார்: 1940 - ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் நாள், சென்னை கோகலே மண்டபத்தில் காந்தியடிகள் பிறந்த நாள் விழா நடைபெற்றது. அந்த விழாவிற்கு சென்னை மேயர் எஸ். சத்திய மூர்த்தி தலைமை வகித்துப் பேசும்போது,