பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 தேசியத் தலைவர் காமராஜர் “பாபிகளை இரட்சிக்க யேசுவந்தார் ஏழைகளை இரட்சிக்ககாந்தி வந்தார் கடவுள்மக்களுக்குஅருளியவரப்பிரசாதம் மகாத்மாகாந்தி” என்று வாதமிட்டார். கூடியிருந்த மக்கள் கூட்டம் ஆரவாரமாகக் கையொலி எழுப்பி மகிழ்ந்தது. நாவலர் சத்தியமூர்த்தி, உலகப் புகழ்பெற்ற ஆங்கிலப் பேச்சாளர்களிலே ஒருவராக விளங்கினார். அவருக்கு ஆங்கிலத்திடம் மோகம் உண்டு. ஆயினும், ஆங்கிலம் அறியாத மக்கள் பெரும்பாலோராக உள்ளபொதுக்கூட்டங்களிலே ஐயர்தமிழில்தான் பேசுவார். அவர் முதல் முதலாகத் தமிழில் சொற்பொழிவாற்றியது மதுராந்தகத்தில் நடந்த கூட்டுறவு மாநாட்டில் தான். அதற்கு சி. சங்கரன்நாயர்தலைமை வகித்தார். நாவலர் சத்தியமூர்த்தி மிகச் சிறந்த இசை ரசிகர்; நாடக நடிகர்; சமஸ்கிருதத்திலே அவர் பெரும் புலமை பெற்றவர். அப்படி இருந்தும், தமிழ்நாட்டு இசையரங்கிலேசமஸ்கிருதமும் தெலுங்கும் ஆதிக்கம் செலுத்துவதனை அவர் வெறுத்தார். வாய்ப்பு நேர்ந்த போதெல்லாம் சங்கீத வித்வான்கள் அடங்கிய சென்னை மியூசிக் அகாடமியின் ஆண்டுவிழா மன்றங்களிலேயே தமது வெறுப்பை மிகவும் துணிவுடன் வெளிப்படுத்தினார். தமிழகத்திலே யாழிசைக்கே முதலிடம் இருக்க வேண்டுமென்றும் வற்புறுத்தினார். பேசுவதில், இத்தகைய வியன்மிகு நா வளம் சத்தியமூர்த்திக்கு இருந்தது! ஆனால், காங்கிரஸ் கட்சியின் நெளிவு சுளிவுகளை அறியாதவர். இந்த நேரங்களில் எல்லாம்.தமது அரசியல் ஆசானுக்குக் கை கொடுத்துப் பக்கபலமாக இருந்தவர்காமராஜ் அவர்களே! சத்தியமூர்த்திக்கு வடநாட்டுத்தலைவர்களிடம் அதிகத் தொடர்பு இருந்தாலும், தமிழ்நாட்டுத் தொண்டர்களிடம் அந்த அளவு பலம் அவருக்குக் கிடையாது. அந்த பலத்தை உருவாக்கிக் கொடுத்தவர் சாட்சாத் காமராஜ்தான் என்பதைச் சந்தேகமின்றி அனைவரும் உணர்ந்தார்கள் ஏற்றார்கள் பாராட்டினார்கள்! அரசியலானாலும் சரி, கட்சியானாலும் சரி, பேதா பேதமின்றி எல்லாரிடமும் பழகி, தனக்கென ஒர் அரசியல் பலத்தை நாளொரு மேனியும் வளர்த்துக் கொண்டே வந்தவர்காமராஜ் அவர்கள்!