பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 181 போராட்டங்களைக்காந்தியடிகள் ஆரம்பித்த காலங்களில் மட்டும் காங்கிரசில் ஈடுபடுவர்களைப் போலல்லாமல், தேர்தல் காலங்களில் மட்டும் காங்கிரஸ் கட்சியில் ஊடுருவுவோர்களைப் போலல்லாமல், எல்லா நேரங்களிலும் இரவு பகலென்றும் பாராமல்; எப்போதும் கட்சிக்காகவே உழைத்திடும் கட்சி வெறிச் சிந்தனையாளராகவே விளங்கியவர்காமராஜ்! தமிழகமெங்கும் நடந்தார் காமராஜ்! அதனால்தான், தமிழகத்தில் அவர் காலடி வைத்த ஒவ்வொரு கிராமங்களிலும் காங்கிரஸ் கட்சியின் பலமென்ன? அதன் வளமென்ன? என்று அறியும் ஆற்றல் அவருக்கு அற்புதமாக அமைந்தது! தமிழ்நாட்டிலுள்ளஒவ்வொரு சிற்றுர்-பேரூர்-நகரங்கள், அங்கே வாழுகின்ற காங்கிரஸ் தலைவர்கள், அதனைப் போலவே எதிர்க்கட்சிகளின்பலங்கள், அதனதன்வளங்கள், அந்தக் கட்சிகளின் தலைவர்களது ஆற்றல்கள் - செல்வாக்குகள், செல்வ நிலைகள், மன உறுதிகள், சபல புத்திகள், அனைத்தையும் காமராஜ் அவர்களால் அரசியல் நாடி பிடித்துப் பார்க்க முடிந்தது என்றால், இதிலே வியப்பேதுமில்லை. - காரணம், அவர் கால்படாத குக்கிராமங்கள்தமிழகத்தில் இல்லை எனலாம்! அவ்வளவு மனப்பாடம் தமிழகத்தைப் பற்றி அவருக்கு இருந்தது. தமிழகத்திலே உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் கிராமங்களிலும் வாழுகின்ற காங்கிரஸ்காரர்கள் எல்லாம், அவருடைய அன்புக் கட்டளைக்களுக்காக காத்திருந்தவர்கள்தான் என்றால், இதிலேதும் மிகையுமில்லை! வியப்புமாகா தூத்துக்குடி கந்தசாமிபிள்ளை, விருதுநகர் முத்துசாமி, சாத்துர் லட்சுமணப்பிள்ளை மதுரை சிதம்பர பாரதி, நித்தியானந்தம், வெங்கடாத்திரி நாயுடு, திருச்சி அருணாசலம், சங்கிலியா பிள்ளை, சீர்காழி சாமிநாதன் செட்டியார், சேலம் தீர்த்தகிரி முதலியார், பண்ருட்டி தேவநாகய்யா, கடலூர் சுதர்சனம், முத்து முதலியார், சிதம்பரம் நைனியப்பன், வட ஆற்காடு உபயதுல்லா, வேலூர் குப்புசாமி முதலியார், திருவண்ணாமலைஅண்ணாமலைப்பிள்ளை, சென்னை ஆதிகேசவலு நாயக்கர், லட்சுமணசாமி முதலியார், எஸ். வெங்கட்ராமன் போன்ற கட்சி அன்பர்கள் எல்லாம் காமராஜ் அவர்களின் நண்பர்களாகக் கடைசி வரையிலும் அவரவர்கள் சாகும்வரையிலும் தொண்டாற்றினர்கள்.