பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 82 தேசியத் தலைவர் காமராஜர் ஆனால், சத்தியமூர்த்திக்கு உரிய அன்பராய், நண்பராய், அரசியல் மாணவராய், ஆபத்துக் கால சகாயராய் எப்போதும் காமராஜ் விளங்கினார் என்பதை, மேற்கண்ட காங்கிரஸ் நண்பர்களும் அறிவார்கள். அதற்கேற்ப அவர்களும் உழைத்தார்கள்: சென்னையிலே, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மாநாடு 1955ஆம் ஆண்டு யு. என். தேபர்தலைமையில் நடைபெற்றபோது, அந்த மாநாட்டிற்காக புதியதோர் நகரமே ஆவடிக்கு அருகே உருவாக்கினார். அப்போது முதலமைச்சராக இருந்த காமராஜ் அவர்கள், அதற்கு ஆவடி மாநாடு என்றே பெயர் விளங்கியது. அந்த மாநாட்டிற்காக அமைந்த நகரத்தின் பெயர்என்னதெரியுமா? சத்தியமூர்த்தி நகர் தனது அரசியல் ஆசான் பெயராலே ஓர் அழகு நகரத்தையே அமைத்தவர்திரு. காமராஜ் அவர்கள் அதேபோல, காமராஜ் அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்ற உடனே, மறைந்த சத்தியமூர்த்தி அவர்களது வீட்டிற்குச் சென்று, அவரது திருவுருவப் படத்திற்கு மலர் மாலையிட்டு வணங்கி, அவருடைய துணைவியாரிடம் ஆசியும் பெற்று வந்த நன்றி மறவா, நட்பு மறவா. நாட்டின்நாயகன்காமராஜ் அவர்கள்