பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளையனே வெளியே மாறுவேட மர்மங்கள்! 1942-ஆம் ஆண்டு பிறந்தது: ஜனவரி மாதம், முதல் தேதி காந்தியடிகள் காங்கிரஸ் கட்சிப் பொறுப்பிலே இருந்து விலகிக் கொண்டார். ஆகஸ்டுப் புரட்சி நாடு கொந்தளிப்பு! அதே ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம்தேதி ஜப்பானியர்கள், ஆந்திர மாநிலத்திலே உள்ள விசாகப்பட்டினம் - காக்கினாடா துறை முகங்கள் மீது வெடிகுண்டுகளை வீசினார்கள் ஆகஸ்டு மாதம் 8-ஆம் தேதி வெள்ளையனே வெளியேறு (Quit India) 'குவிட் இந்தியா' தீர்மானம் காங்கிரஸ் கட்சியிலே நிறைவேற்றப்பட்டது! 'Do or die', 'செய் அல்லது செத்து மடி' என்ற தீர்மானம் காந்தியடிகளால் அறிவிக்கப்பட்டது. - காந்தியடிகள் கைது செய்யப்பட்டார் - அதனால் கன்னியாகுமரியிலிருந்து, காஷ்மீர்வரை நாடெங்கும் ரயில் தண்டவாளங்களைப் பெயர்ப்பது, தந்திக் கம்பிகளை அறுப்பது, ரயில் பாலங்களைத் தகர்ப்பது, அரசாங்க நிலையங்களுக்குத் தீ வைப்பது; போன்ற நாச வேலைகள் மக்கள் ஆவேசத்தால் நடந்து கொண்டிருந்தன. 1942-ஆகஸ்ட் 8 ஆம் நாள், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் மகாத்மா தலைமை ஏற்கப்பட்டு, (Quit india) வெள்ளையனே, வெளியேறு' என்ற தீர்மானம் நிறைவேற்றப் பட்டதை இராஜாஜி விரும்பவில்லை! அதை எதிர்த்தார். ஜின்னாவின் பாகிஸ்தான் கோரிக்கைக்கு இசைந்து, பிரிட்டிஷாரிடமிருந்து ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்ற வேண்டும் என்பதில் ராஜாஜி தீவிரமாக இருந்தார். காங்கிரஸ் கட்சியிலே இருந்து பிரிந்து, தமது கருத்தினை மக்களிடையே அவர் பிரசாரம் செய்து வந்தார்: