பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 84 தேசியத் தலைவர் காமராஜர் சத்தியமூர்த்திக்கு ராஜாஜியின் காந்தியடிகள் எதிர்ப்பு அறவே பிடிக்கவில்லை! அதனால், இராஜாஜியை எதிர்ப்பவர்கள் யாரோஎவரோ அவர்களை எல்லாம் சத்தியமூர்த்தி பாராட்டிக் கொண்டிருந்தார். இந்திய விடுதலைப் போர் வரலாற்றில் ஆகஸ்டுப் புரட்சி ஒரு பொன்னேட்டுச்சம்பவம் போன்றது. இந்தியாவின் மானங்காக்கும் மாபெரும் புரட்சியாக, அது நாடெங்கும் வெடித்துக் கொண்டிருந்தது! 'நாம் தீட்டப்பட்ட கூரிய வாளின் முனையிலே நிற்பதுபோல் இருக்கின்றோம்! எந்த நேரத்தில் என்ன நடக்குமோதெரியவில்லை. எதுவும் நடக்கலாம்! எதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்." என்று, பண்டித நேரு அவர்கள் அப்போது நாடெங்கும் சூறாவளி வேகத்தில் முழங்கிக் கொண்டிருந்தார். காந்தியடிகள் தனது பொறுமையின்சிகரத்திலே இருந்து கீழே இறங்கிவந்து, 'பிரிட்டிஷ் ஆட்சியை இனி நம்பிப் பயனில்லை' என்று பேசி, ஆகஸ்டுப் புரட்சிக்குப் பச்சைக் கொடி காட்டிவிட்டார்: நடக்கும் உலகப்போரில், பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகள் ஒரு பக்கமும்-ஜெர்மனி, இதாலி, ஜப்பான்நாடுகள் மறுபக்கமும் நின்றன. போர் நாச வேலைகளை அந்த யுத்த அணி நாடுகள் நடத்தி, உச்சக் கட்டத்திலே அவை உலகை அச்சுறுத்திக் கொண்டிருந்தன! - அந்தப் போரில், இந்தியரைக் கேட்காமலே, இந்தியாவும் பிரிட்டனுக்கு ஆதரவாகப் போரில் குதித்திருப்பதாக, ஆங்கிலேயர் ஆட்சி உலகுக்கு அறிவித்துவிட்டது! காந்தியடிகள், நேரு, போன்ற முக்கியமான இந்தியத்தலைவர்கள் எல்லாம் வெள்ளயர்ஆட்சியின்அறிக்கையை எதிர்த்தனர்; மறுத்தனர். இந்தியாவே உரிமை இழந்து அடிமைப்பட்டிருக்கும் நிலையில்; அது வேறு நாடுகளுக்காக எப்படிப் போரில் குதிக்க முடியும்? என்ற எதிர் கேள்வியை எழுப்பினார்காந்தியடிகள்: "போரின் இறுதிக் கட்டத்திலாவது இந்தியாவிற்கு விடுதலை அளிக்கப்படும் என்று உறுதியளித்திருந்தால், போர் முயற்சிகளுக்கு நாம் ஆதரவளிப்பதைப் பற்றி சிந்தித்திருக்கலாம்' என்றார் காந்தியடிகள். -