பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 185 சர்ச்சில் ஆணவம்! "நான் பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தின் பிரதமராக இருப்பது, சாம்ராச்சியத்தின்கல்லறைகட்டும் பணிக்குத்தலைமை தாங்கவா?” "அந்த அரை நிர்வாணப் பக்கிரி காந்தியையும்; அவரது ஆட்களையும் அடக்க எனக்குத் துப்பாக்கிகளா தேவை? சாதாரண இலட்டித் தடிகளே போதாதா?' என்று, ஆணவத்தின் உச்சியிலே நின்று கொண்டு ஆர்ப்பரித்தார் பிரிட்டிஷ் பிரதமரான வின்ஸ்ட்டன் சர்ச்சில் அவர்கள் 'அப்படியா? இந்தியாவின் ஆதரவு பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கிடையாது' என்று, திரு. சர்ச்சிலுக்கு அகில இந்திய தேசிய இயக்கம் திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. மாவீரன் போஸ்! இவைகட்கு எல்லாம் முன்னாலேயே சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவை விட்டு மர்மமாக மறைந்தார்என்ற செய்திநாடெல்லாம் பரவி, அவர்பிரிட்டிஷ் நாடுகளுக்கு எதிரானநாடுகளின் உதவிகளைப் பெற்று, இந்திய தேசிய இராணுவம் ஒன்றை அமைத்து, அதன் வீரத் தளபதியாக அவர் தோன்றியது - உலகை ஒர் உலுக்கு உலுக்கியது! கெஞ்சினால் மிஞ்சல், மிஞ்சினால் கெஞ்சல் என்ற கொள்கையை கொண்டிருந்த ஆங்கில ஆட்சி 1942- மார்ச் மாதத்தில் சர் ஸ்டாப் ஃபோர்டு கிரிப்ஸ் என்பவரை, இந்திய சுதந்திரம் பற்றிய பிரச்னைகளை அறிந்து வரும்படி ஒருதுதுக்குழுவை அனுப்பியது. ஜனாப் மெளலானா அபுல்கலாம் ஆசாதும், காந்தியடிகளும், கிரிப்ஸ்அவர்களைச்சந்தித்துப்பேசினார்கள் இந்து-முஸ்லிம் என்ற புதிய சிக்கலை எழுப்பினார்கிரிப்ஸ் அப்போது. 'சில நிபந்தனைகளோடு கூடிய இந்திய சுதந்திரத்தைப் போர் முடிவில் வழங்குவோம்” என்று காந்தியடிகள் முன்பு கூறிய யோசனையையே மீண்டும் எதிரொலித்தார். போர்முடிந்தபின்னால்-அதுவும் வெள்ளையர்மனதுவைத்தால் ஏதோவிடுதலை கிடைக்குமாம். இது ஒரு பின்தேதியிட்ட Glgä, (Post Dated Cheque) போன்ற இதை ஏற்கமுடியாது' என்று திட்டவட்டமாக மறுத்தார்காந்தியடிகள்.