பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 தேசியத் தலைவர் காமராஜர் இராஜாஜி விலக : சர்தார் கடிதம்! இந்த நேரத்தில், இந்தியாபாகிஸ்தான் பிரிவினைக்கு இராஜாஜி ஆதரவு காட்டினார். அதன் விளைவாக 1942 - ஜூலை 15ஆம் நாள், காந்தியடிகளே, சர்தார்வல்லபபாய் படேலின் வாக்கிற்கு இணங்க, இராஜாஜியைக் காங்கிரசிலே இருந்து விலகும் படி கடிதம் எழுதினார்: இத்தகைய அரசியல் சூழ்நிலை இந்தியாவில் தோற்றமளித்து நெருக்கிக் கொண்டிருந்த நேரத்திலே, பம்பாய் மாநகரில் கோவாலியா தெப்பக்குளம் மைதானத்தில், 1942-ஜூலை 8-ஆம் நாள், இந்திய தேசியக் காங்கிரஸ் மகாசபை கூடியது. வரலாற்றுப் புகழ்பெற்ற இந்தக் கூட்டத்திற்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த திருவாளர்கள் கே. காமராஜ், எஸ். சத்தியமூர்த்தி, சி.என். முத்துரங்க முதலியார், எம். பக்தவச்சலம் உட்பட முப்பது பேர்களுக்கு மேல் சென்றார்கள் - பம்பாய் மகாசபைக்கு: வெள்ளையனே வெளியேறு! அந்த மகாசபைக்கு, மெளலானா அபுல்கலாம் ஆசாத் தலைமையேற்றார் காந்தியடிகள் விருப்பப்படி, 'வெள்ளையனே வெளியேறு' (Quit India) என்ற வரலாறு படைத்தத் தீர்மானம் பண்டித நேரு அவர்களால் முன் மொழியப்பட்டது. அவர், அப்போது தீர்மான உரை ஒன்று ஆற்றுகையில், "இந்தியாவின்தன்மானம் பேரம் பேசக்கூடியதொரு பொருளல்ல! போராட்டம். முடிவற்ற போராட்டம், இதுவே ஆங்கிலப் GLJJ&#65 orangi Lósi Struggle... Eternal struggle that is my reply to the British Empire gran (uppástóll ll_stř lugărią F GFG5! அந்தத் தீர்மானத்தை இரும்பு மனிதர் என்று இந்திய மக்களால் போற்றப்பட்ட சர்தார் வல்லபபாய் படேல் வழி மொழிந்தார்: கவிக்குயில் திருமதி சரோஜினி நாயுடு, ஜே.பி. கிருபளானி, பண்டித பந்த், எஸ். சத்தியமூர்த்தி உட்பட பலர் அந்த தீர்மானத்தை ஆதரித்து, வெள்ளை ஆட்சிக்கு அறை கூவலிட்டார்கள் காந்தியடிகள் போர் உரை! இறுதியாக, மகாத்மா காந்தியடிகள் - நூற்று நாற்பது நிமிடங்கள், எரிமலை ஒன்று வெடித்தது போல் சுதந்திரப்போர் உரையாற்றினார்: