பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 487 “சுதந்திரம் உடனடியாக வந்தாக வேண்டும் அதுவும், இன்றிரவே விடுதலை கிடைப்பது உறுதியானால், காலை புலரு முன்பே கிடைத்தாக வேண்டும். 'இந்த நிமிடம் முதல் நீங்கள், ஒவ்வொருவரும் உங்களைச் சுதந்திர மனிதனாக எண்ணிக் கொள்ள வேண்டும். இனி, நீங்கள் அடிமைகளல்லர் சுதந்திரத்தின் சாரமே இதுதான்' "தான் அடிமையல்லன் என்ற உணர்வு ஒருவனுக்கு ஏற்பட்ட உடனேயே அவனது அடிமைத்தளைகள் உடைந்து நொறுங்கி விடும்!” "இதோ ஒருதாரகமந்திரம் சொல்லுகிறேன்! இதை மறக்காமல் மனத்தில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்!" செப் அல்லது செத்து மடி! "நீங்கள் விடும் ஒவ்வொரு மூச்சும், "செய்அல்லது செத்து மடி’ (Do or Die) இந்தியாவை விடுவிப்போம் அல்லது அந்த முயற்சியில் செத்து மடிவோம்! அடிமைத் தனம் நிலைத்திருப்பதைப் பார்க்க நாம் உயிர்வாழத் தேவையில்லை' என்ற போர் அறை கூவலை காந்தியடிகள் முழக்க மிட்டார். அப்போது இரவு 10 மணிக்கு மேல் இருக்கும்! அந்த மகாசபையில் நிறைவேற்றப்பட்ட விடுதலைத் தீர்மான விவரம் இதோ: 'இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி உடனே முடியவேண்டும். நாசிசம், பாசிசம், ஏகாதிபத்திய முறை இவைகளை ஒழிக்கச் சுதந்திர இந்தியா உதவும்.' - நள்ளிரவிலே தலைவர்கள் கைது! பிரிட்டன் தானே ஒதுங்க இணங்காவிட்டால், காந்தியடிகள் தலைமையில் அகிம்சா தர்மச் சுதந்திரப் போர் நடத்தப்படும். அன்னிய ஆட்சி ஒழிந்ததும், வகுப்பு ஒற்றுமை ஏற்படும். அதன் பின்னர் சகல வகுப்பின் பிரதி நிதிகளையும் கொண்ட தாற்காலிகமானதோர் இந்திய ஆட்சி அமைக்கப்படும்' இந்தத் தீர்மானம் அதிக எதிர்ப்பின்றி பலத்த வரவேற்புடன் பம்பாய் மகாசபையிலே நிறைவேறியது. அதைக் காணச் சகியாத வெள்ளை ஆட்சி, மறுநாள் ஆகஸ்டு 9ஆம் நாள், காலை ஐந்து மணிக்கெல்லாம் மகாத்மாகாந்தியடிகள், கஸ்தூரிபாய், மீராபென், படேல், பியாரேலால், மகாதேவ் தேசாய்,