பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488 தேசியத் தலைவர் காமராஜர் கவிக்குயில் சரோஜினி தேவி, சர்தார் வல்லபபாய் படேல், பண்டித ஜவகர்லால் நேரு, ஜனாப் மெளலானா அபுல்கலாம் ஆசாத் மற்றும் அன்றிரவு கிடைத்த எல்லாத் தலைவர்களையும் கூண்டோடு கைது செய்தது. கைது செய்யப்பட்ட காங்கிரஸ் தலைவர்களை எல்லாம் ஆங்கிலேயர்ஆட்சியினர் எங்கே அழைத்துச் செல்கிறார்கள் என்று தெரிவிக்கவில்லை. காந்தியடிகள் குழுவினரைப் புனாவிலே உள்ள ஆகாகான் மாளிகையிலும் பண்டித நேரு உட்பட்ட மற்ற தலைவர்களை எல்லாம் அகமத் நகர் கோட்டையிலும் வெள்ளையராட்சி சிறையிட்டது. தங்களது தலைவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டுத் தாறுமாறாக எங்கெங்கோ கொண்டுபோய் அடைக்கபட்டச் செய்தியோடு ஆகஸ்டு 9-ஆம் நாள் சூரியன் உதயமாயிற்று. பம்பாய் நகரத்திலே ஒர் எரிமலை பலாத்காரமாக வெடித்தது போன்ற உணர்வுகளால் உந்தப்பட்ட மக்கள்; தங்களது எண்ணங்கள் சென்றவாறெல்லாம் ஆரவாரம் செய்தனர். எழுந்தன துப் பாக்கி வேட்டுக்கள்! விழுந்தன பிணங்கள்! நடந்தன - தடியடிதர்பார்கள் சிந்தினர் ரத்தத்தை மக்கள்! ஒன்பதாம் நாள் காலை 9 மணிக்கு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுப் பந்தலிலே, காங்கிரஸ் கொடியை ஏற்றி வைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது முக்கியத் தலைவர்கள் கைதானமையால் அது நடக்குமோ நடக்காதோ என்ற மக்கள் சந்தேகப்பட்டனர்! கொடியை பறக்கவிட்ட மர்ம மறத்தி! அப்போது எங்கிருந்தோ ஒரு பெண்மணி வந்தாள் புரட்சிப் புயலென மாநாட்டுத் திடலுக்குள்ளே புகுந்தாள் கதராடை உடுத்தியிருந்த கண்ணகி ஏற்றினாள் கொடியை அந்த மாநாட்டுக்குப் பந்தல் முகப்பில் - காலை 9 - மணிக்கே பறந்தது வானளாவப்பட்டொளி வீசியபடியே மூவண்ணக் கொடி! வெள்ளைக்காவலர்கள் விரைந்தனர்-படை படையாகதுள்ளித் துடித்த அந்த வீராங்கனைச் செயலைத் தடுத்திடத் துரத்தியோடி வந்தனர். அதற்குள் அந்த வீரப் பெண்மணி, நாடெங்கும் புரட்சி நடக்கட்டும் என்று சங்கநாதத்தை ஊதினாள்: யார் தெரியுமா அந்த வீரமங்கை? - அருணா ஆஸப் அலி என்ற சுதந்திர தேவியின் தங்கை வீர மங்கை அடிமைத்தனத்தின் விலாயெலும்பை ஒடித்த வேங்கை: