பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாறுவேடத்தில் காமராசர்! காமராஜ் அவர்கள், தமிழகத்திலிருந்து சென்ற பிரதிநிதிகள், ஆந்திர மாநிலத் தலைவர்களுள் ஒருவரான என் சஞ்சீவரெட்டி ஆகியோர் அனைவரும், அன்று புறப்பட்ட பம்பாய் எக்ஸ்பிரஸில் சென்னை திரும்பினார்கள். ஆந்திர எல்லை வந்ததும் சஞ்சீவ ரெட்டியைக் கைது செய்தது வெள்ளையராட்சி! இதைக் கண்டதும் காமராஜ் எச்சரிக்கையாகி விட்டார்! ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் வழி நெடுக பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டிருப்பதைக் கண்டார்: பம்பாய் எக்ஸ்பிரஸ் அரக்கோணம் சந்திப்பிலே வந்து நின்றது. இரயில் நிலையத்தைக் காமராஜ் எட்டிப் பார்த்தார் ஏராளமான காவலர்கள் அங்கே பரவலாக நிறுத்தப்பட்டிருப்பது அவருக்குத் தெரிந்தது! உடனே தலைவர் காமராஜ் அவசர அவசரமாக எழுந்தார்! தலையிலே ஒரு தலைப்பாகையைக் கட்டிக் கொண்டார்! துண்டைத் தோள்மேலே போட்டுக் கொண்டு தனது சிறு துணி மூட்டையைக் கையிலேதுாக்கிக் கொண்டார். அந்த மூட்டையிலே தான் பம்பாய் மகாசபைப் போராட்டத் தீர்மான நகல்கள் இருந்தன! சென்னைக்குச் சென்றால் சென்ட்ரல் ரயில்வே நியைத்திலேயே தம்மையும் கைது செய்து விடுவார்கள் அதனால், அரக்கோணத் திலேயே இறங்கி விட்டார் காமராஜ்! யாரும் தம்மை அடையாளம் காணாதபடி, இரயிலை விட்டு இறங்கி, ஒரு கிராமத்தான் நடந்து போவதைப் போல வெகு வேகமாக நடந்தார் இரயில் நிலையத்தின் வெளிப்புறத்துக்கு வந்தார்! காவலர்கள் ஆங்காங்கே கும்பலாக நின்று கொண்டிருப்பதைக் காமராஜ் கண்டதும் - காணாதது மாதிரி வேக வேகமாக நடந்து, பேருந்து நிலையம் வந்ததும், இராணிப்பேட்டை போகும் பஸ்சிலே ஏறி உட்கார்ந்தார். கட்டிய தலைப் பாகையை அவிழ்க்காமல், பேருந்து மூலமாக இராணிப்பேட்டைக்கு வந்தார்: இதற்கிடையில் எதையும் கவனியாமல், ஏதோ ஒரு குடியானவனைப் போலத் தோற்றம் தந்தவாறே, விடியல் இருட்டு நேரத்தில், தனது நண்பரும், வடாற்காடு மாவட்டக்காங்கிரஸ் குழு உறுப்பினருமான கே. ஆர். கல்யாணராமய்யர் வீட்டுக் கதவைத் தட்டினார்காமராஜ்.