பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 90 தேசியத் தலைவர் காமராஜர் விடியல் நேரம் கதவைத் தட்டுவது காவல்துறையாக இருக்குமோ தன்னையும் கைது செய்யத்தான் ஆங்கிலேயர் வந்துள்ளனரோ என்ற பதட்டத்தில் கலியாண ராமய்யர் கதவைத் திறந்தார். அங்கே காமராஜ் நின்றிருந்தார்: இராணிப்பேட்டை கலியாணராமப்யர்: கலியாணராமய்யர் உடனே எவரும் அறியாவண்ணம், வீட்டிற் குள்ளே தலைவர்காமராஜரை அழைத்துச்சென்று, உண்ண உணவும் - பழ வகைகளையும் தாயாரைத் தரச் செய்து, மீண்டும் வந்து கதவைத் தாளிட்டுவிட்டு, நடந்தவிவரங்களை எல்லாம் ஐயர் கேட்டறிந்தார் இருவரும் நீண்ட நேரம் கலந்துரையாடினார்கள்: கலியாணராமய்யரின் அன்னையார், நடைபெறும் சுதந்திரப் போராட்டம் வெற்ற பெற வாழ்த்தி, இறைவனையும் வணங்கினார்.திடீரென்று காவலர்கள் வந்தால் என்ன செய்வது? போராட்டத் திட்டமெல்லாம் வீணாகிப்போய் கைதாகும் நிலையேற்படும் என்று நினைத்த கலியாணராமய்யர், காமராஜ் அவர்களைத் தலைமறைவாகத் தங்கவைத்திட, ஜனாப் முகமது சுலைமான் என்ற காங்கிரஸ்காரருடைய தோட்ட வீட்டிற்கு அழைத்துச் சென்று தங்க வைத்தார்: மறுநாள் மாலை, அவர்கள் இருவரும் புறப்பட்டு தஞ்சை மாவட்டம், மதுரை மாவட்டம், நெல்லை மாவட்டம் முதலிய இடங்களுக்குச் சென்றனர். ஆங்காங்குள்ள காங்கிரஸ் போராட்டத் தோழர்களை எல்லாம் கண்டு கலந்துரையாடி, ஆகஸ்டுப் புரட்சிக்கான எல்லா செயல் திட்டங்களையும் விளக்கினார்கள்! தன்னை வந்து சந்தித்த ஒவ்வோர் ஊர் காங்கிரஸ் தலைவர் களிடமும் தொண்டர்களிடமும், வெள்ளையனே வெளியேறு' என்று பம்பாய் போராட்டத் தீர்மான நகல்களை மாறுவேடக் காமராஜ் கொடுத்தார்: "இந்திய மக்களின் ஒப்புதல் இன்றியே, வெள்ளையர்கள் இந்தியாவில் எடுத்து வரும் போர் ஆதரவு உதவிகளைத் தடை செய்ய வேண்டும். இயன்ற வரை ஆங்கிலேய ஆட்சியின் இந்திய நிர்வாகத்தைத் தடைப்படுத்துதல் வேண்டும். ஆட்சியின் செயல்முறைகளை முடிந்தவரை இயங்க வொட்டாமல் முடமாக்குதல் வேண்டும். இவைதான் ஆகஸ்டுப் போராட்டப் புரட்சியின் முக்கியத்துவமாகும்" - என்று காமராஜர் தெளிவுபட எடுத்துக் கூறினார்.