பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 194 எல்லா ஊர்த்தொண்டர்களும் அவர் கூறியவற்றை உற்றுக் கேட்டு ஊன்றி உணர்ந்து, எப்படியும் ஆகஸ்டுப் போராட்டத்தை ஏற்றுப்போராடுவது என்ற எழுச்சியைப் பெற்றார்கள்! வேலுரில் காமராஜ்! வேலூரிலே இருந்து கொண்டுவரப்பட்ட ஒரு பிரைவேட் டாக்சியில், கலியாணராமய்யரும் காமராஜ் அவர்களும் ஏறிக்கொண்டு, வடாற்காடு மாவட்டத்து முக்கிய நகரங்களுக்கு எல்லாம் சென்று போராட்டச் செய்தியைப் பரப்பியதும், வந்த டாக்சியை அனுப்பிவிட்டு, ரயிலில் தஞ்சை மாவட்டத்திற்குச் சென்றார்கள்! - போகும் வழியில், தலைவர்காமராஜ் திருவண்ணாமலையிலே உள்ள அண்ணாமலைப் பிள்ளையைச் சந்திக்க முயன்றார். திருவண்ணாமலை இரயில் நிலையத்தில் வண்டி நின்றதும், அங்கே யாராவது காங்கிரஸ்காரர்கள் இருக்கிறார்களாஎன்று அவர் எட்டிப் பார்த்தார். இறுதியில், ஒரு பள்ளி ஆசிரியர் கிடைக்கவே அவரிடம் போராட்ட நகல்களைக் கொடுத்து, நகரக் காங்கிரஸ் அலுவலகத்தில் அதைச் சேர்த்துவிடுமாறு அவர் கேட்டுக் கொண்டார். மீண்டும் ரயிலில் ஏறி அமர்ந்தார் விழுப்புரத்தில் காமராஜ்! சிவப்புத் தொப்பியினை அணிந்து கொண்டிருந்த காவலர்கள், விழுப்புரம் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டிருந்தார்கள். கதர் சட்டை அணிந்தவர்கள் யார் வந்தாலும், கைது செய்வது என்ற திட்டத்தோடு அவர்கள் நின்று கொண்டிருந்த பரபரப்பு அங்குச் சூழ்ந்திருந்தது! எந்தக் கதர்ச்சட்டைக்காரரும் விழுப்புரம் ரயில் நிலையத்தில் தென்படவில்லை . இவர்கள் கண்களுக்கு திரு. காமராஜ் அவர்கள் மட்டும் வண்டிக்குள்ளேயே உட்கார்ந்திருந்தார்; தன்னை யாரும் அடையாளம் கண்டுவிடாதபடி. கலியாணராமய்யர் கண்ணிற்படாமல் வண்டியை விட்டுக் கீழே இறங்கிச் சில கதர்ச்சட்டைக்காரர்களைச் சந்தித்துப் போராட்ட நகல் தீர்மானங்களைக் கொடுத்துவிட்டார்: தஞ்சையில் காமராஜ் காமராஜ் பிறகு, தஞ்சை நகர் சென்று, நகர காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.ஆர்.வி. நாராயணசாமி அவர்களைச் சந்தித்துப் போராட்ட விவரங்களை விளக்கினார் - காமராஜ்! காங்கிரஸ்