பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 92 தேசியத் தலைவர் காமராஜர் தொண்டர்களிடம் போராட்டத் திட்டத்தை எடுத்துரைத்து வெற்றிகரமாக அறப்போராற்றுமாறு அவர் கேட்டுக் கொண்டார். திருச்சி ரயில் நிலையம் வந்தது! அங்கே காவலர்கள் ஏராளமாகக் குவிக்கப்பட்டிருந்தார்கள் அவர்களையும் மீறி திரு காமராஜூம், கலியாணராமப்யரும் ஸ்டேஷனில் இறங்காமல் ரயில்வே தண்டவாளக் கிராசிங்குகளை எல்லாம் தாண்டி, திருச்சி காங்கிரஸ் கட்சித் தலைவரான திரு. எம். எஸ். ரங்கசாமியின் வீட்டை அடைந்தார்கள்! திருச்சியில் காமராஜ் அரியலூரில் ஒருசதித்திட்டத்தைக்காங்கிரஸ்காரர்கள்உருவாக்கப் போகிறார்கள் என்ற செய்தியைக் கேள்விப் பட்ட காவல்துறை, மிகவும் எச்சரிக்கையோடுகாவலர்களைநிறுத்தி வைத்திருந்தது. யார் அகப்பட்டாலும் சரி எல்லோரையும் கைது செய்யும் நோக்கத்தில் கடுமையான கட்டுப்பாட்டோடு இருந்தார்கள் காவலர்கள்! திருச்சியிலே எம்.எஸ். ரங்கசாமி அவர்களையும் - பிற காங்கிரஸ் தொண்டர்களையும் மாறுவேடமணிந்த அவர்கள் பார்த்துப் பேசியபின்பு, அவர்கள் இருவரும் ஒரு கார் மூலம் மதுரை நோக்கிப் பயணமானார்கள் போகும் வழியில் திண்டுக்கல் நகர காங்கிரஸ் அலுவலகத்திற்குச் செய்தியும் - நகலும் காங்கிரஸ்காரர்கள் மூலம் அனுப்பினார்கள்! மதுரையில் காமராஜ் மதுரையில் பி.எஸ். குமாரசாமி ராஜாவந்திருந்தார். அவரிடமும் மதுரை நகரக் காங்கிரஸ் தலைவர்களான சிதம்பர பாரதி, நித்தியானந்தம், வெங்கடாத்திரி நாயுடு ஆகியோரிடமும், மற்றும் தொண்டர்களிடமும், போராட்டத் திட்டங்களையும், அதனை எவ்வாறு ஆற்றுவது என்ற வழிமுறைகளையும் திரு காமராஜ் வகுத்தளித்தார் அதன் பிறகு காமராஜ் விருதுநகருக்குச் சென்றார்: கலியாணராமய்யர் திருநெல்வேலி காங்கிரஸ் கட்சி நகரத் தலைவர்களையும், தூத்துக்குடி கந்தசாமி பிள்ளையையும் சந்தித்து விவரங்களைக் கூறியபின், முடிந்தால் சேலம், கோவை மாவட்டங்களுக்கும் சென்று; போராட்டச் செய்திகளை விளக்கியபின், இராணிப்பேட்டைக்குத் திரும்புமாறு காமராஜ் அனுப்பி வைத்தார்: