பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 1 93 கலியாணராமப்யர் கைதானார்! கலியாணராமய்யரிடம் வழிச் செலவுக்குரிய போதிய பணம் இல்லாமையால், நெல்லை நகரக்காங்கிரஸ் தலைவரிடம் மட்டும் போராட்ட நகல்களைக் கொடுத்து உரிய விளக்கத்தையும் கூறி நேராக இராணிப்பேட்டைக்கே சென்றார். இராணிப்பேட்டை திரும்பிய அவர் தனது இல்லத்தில் நுழையும்போது, காவலர்கள் அவரைக் கைது செய்தார்கள். வேலூர் சிறையிலேயும் - பிறகு தஞ்சைச் சிறையிலேயும் அவர் காவலில் வைக்கப்பட்டார்; விருதுநகரில் காமராஜ் விருதுநகருக்குச் சென்ற மாறு வேடக் காமராஜ், அந்த ஊருக்கு இரண்டு மைல்துரம் முன்னாலேயே உள்ள ரெட்டியார்பட்டி இரயில் நிலையத்தில் இறங்கி, விருதுநகர் காங்கிரஸ் தோழர்களுக்கு தாம் வந்திருப்பதைச் சொல்லி அனுப்பினார். ரெட்டியார் பட்டிக்குச் சென்ற விருதுநகர் காங்கிரஸ் தோழர்கள் தலைவர் காமராஜ் அவர்களைச் சந்தித்து, பிறகு அனைவரும் நடந்தே விருதுநகருக்குள் வந்தார்கள்; வரும் வழியெல்லாம் பம்பாய் மகாசபைத் தீர்மானம், மாநாடு, அங்கே தலைவர்கள் ஆற்றிய உரையின் உட்கருத்துக்கள், காந்தியடிகளின் உருக்கமான போராட்ட உரை அனைத்யுைம் காமராஜ் விவரித்தபடியே வந்தார். பின்பு தலைவர் காமராஜை அவர்களது இல்லத்தில் விட்டு விட்டு, காங்கிரஸ்காரர்கள்.அவரவர் வீட்டிற்குத் திரும்பிச் சென்றார்கள்.ஆகஸ்டு 16-ஆம் நாள்: உதயசூரியன் உதித்துக் கரகரவென்று மேலேறி வரும் நேரம்: ஜெயராம் ரெட்டியார் என்பவர் காமராஜ் அவர்களைக் காண வந்தார்: 'ரெட்டியாரே விருதுநகர் காவல் நிலையத்திற்கு நீர் போய் நான் கைதாகத் தயார் காவலரை வரச் சொன்னேன் என்று கூறிவிட்டு வா’ என்று காமராஜ் அவர்கள் அனுப்பி வைத்தார் ரெட் டியாரை, எழுத்தச்சன் என்றொரு ஆய்வாளர் காவல் நிலையத்திலே இருந்து ஒடோடி வந்து, காமராஜ் அவர்களே, நீங்கள் ஏன் அவசரப்படுகிறீர்கள்? உங்களைக் கைது செய்ய வாரண்டுடன் வந்த அதிகாரி அரியலூர் சென்றிருக்கிறார்: அவர் வரும்வரை நீங்கள் ஒய்வெடுங்கள் நான் எவரிடமும் இதைக் கூற மாட்டேன்." என்றார்.