பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 94. தேசியத் தலைவர் காமராஜர் "நான் இந்தப் போராட்டத்திற்காக என்னென்ன பணிகளைச் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து என் கடமையை முடித்து விட்டேன். இனி, நான் மட்டும் வெளியே இருக்க விரும்பவில்லை. என் தலைவர்கள் எல்லாம் எங்கெங்கோ சிறைகளிலே வாடிடும் போது, எனக்கு மட்டும் ஏன் ஒய்வு ? அடிமை நாட்டில் அடிமைக்குச் சுகமா? சுதந்திரம் இல்லாத நாட்டில் சிறையில் இருப்பதுதான் விடுதலை வீரர்களுக்கான சுகம்! இன்பம்! அனுபவம் வெளியே இருப்பதுதான் வேதனை! சித்ரவதை எனவே, என்னை உடனே கைது செய்யுங்கள்' என்றார் தலைவர்காமராஜ்! ஆய்வாளர் எழுத்தச்சன் ஆடி அடங்கிப் போனார். அவருடைய வீரத்தையும், கருணை - தவழும் தலைவர்கள்மேல் வைத்துள்ள பாசத்தையும் கண்டு உள்ளம் சிலிர்த்தார் காமராஜுக்கும் நமக்கும் காக்கிச்சட்டை அல்லவா நடுவிலே நிற்கிறது! என்று தேசியப்பற்றால் திகைத்துப் போய் நின்றார்: இருப்பினும், அவரது கடமை தவறலாமா? கைது செய்தார் காமராஜை வேலூர் சிறைக்கு உரிய பாதுகாப்போடு அவரை அனுப்பி வைத்தார்! பெட்டி நிறையப் புத்தகங்களைச் சுமந்து கொண்டு தலைவர்காமராஜ் காராக்கிருகம் சென்றார்! சிறைக்குச் சிறை மாற்றப்பட்டார்: வேலூர் சிறைக்குச் சென்ற தலைவரை, அமராவதி சிறைக்கு அனுப்பி வைத்தார்கள் சிறையதிகாரிகள் அந்தச் சிறையிலேதான் இரவோடு இரவாக நாடெங்கும் கைதான தலைவர்கள் எல்லாரும் சிறையில் தவம் கிடக்கிறார்கள்! மீண்டும் காமராஜ் வேலூர் சிறைக்கே மாற்றப்பட்டார் விருதுநகர் நகராட்சியிலே, காமராஜ் அவர்களைக் கைது செய்ததும் நகரசபைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் காங்கிரஸ் தேசத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்துக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அந்தப் பிரதி ஒன்று மதுரை மாவட்ட ஆட்சியாளருக்கும் அனுப்பப்பட்டது. மாவட்ட ஆட்சியாளர் ஒர் ஆங்கிலேயர் அதனால், நகராட்சி உறுப்பினர்களைக் கைது செய்யுமாறு அவர் ஆணையிட்டார்: முருக - தனுஷ்கோடி, இராமையா நாடார், குருசாமி என்ற மூவரும்தான் அந்தத் தீர்மானத்தை நகரசபையிலே நிறைவேற்றினார்கள் அதனால், அந்த மூவரையும் ஆங்கிலேயர் ஆட்சி கைது செய்தது!